பிக் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.’
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிக பிரபலமானது ‘நாளைய இயக்குநர்’ தொடர். அந்த போட்டியில் பங்கு கொண்ட பல இயக்குநர்கள் வெள்ளித்திரையில் படம் இயக்கி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அந்த ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கே இயக்குநரான அழகுராஜ் இயக்கும், முதல் படம்தான் இந்த ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.’
இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடிக்க உள்ளார். நாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர் பல மலையாள படங்களில் நடித்தவர். மற்றும் மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சந்தான கிருஷ்ணன், இசை – லியாண்டர் லீ, கலை – மகி, ஸ்டண்ட் -ஆக்சன் பிரகாஷ், நடனம் –சௌமியா, தயாரிப்பு மேற்பார்வை – ஆத்தூர் ஆறுமுகம், இணை தயாரிப்பு – M. செந்தில் பாலசுப்ரமணியம், தயாரிப்பு – கோவை ரவிச்சந்திரன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அழகுராஜ்.
படம் பற்றி இயக்குநர் அழகுராஜ் பேசும்போது, “காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு கமர்ஷியல் படம் இது. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக உள்ளது. படப்பிடிப்பு விரைவில் துவங்கி சென்னை, கோவை மற்றும் கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது..” என்றார்.









