‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் – சத்யஜோதி பிலிம்ஸின் சிறப்புமிக்க பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்.
மூன்று தலைமுறைகள்… ஏழு தசாப்தங்கள்… தேசிய அங்கீகாரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரே ஒரு மகத்தான பாரம்பரியம்!
72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சிறப்புமிக்க பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது.
அந்நிறுவனத்தின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், தேசிய, சமூக மற்றும் சுற்றுச் சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதையும்,
இப்படத்தில் தனது ஆழமான மற்றும் சக்தி வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், சிறப்பு பாராட்டு (Special Mention) விருதையும் பெற்றிருப்பது படக் குழுவினருக்கும், சத்யஜோதி பிலிம்ஸுக்கும் பெருமை சேர்த்துள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸுக்கு இந்த தேசிய அங்கீகாரம் வெறும் விருதாக மட்டுமல்ல; ஏழு தசாப்தங்களாக, மூன்று தலைமுறைகள் தொடர்ந்து அர்த்தமுள்ள கதைகள், கலைநயம் மிக்க படைப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய திரைப்படங்களை உருவாக்கி வந்த பாரம்பரியத்திற்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும்.
இந்த மகத்தான பயணத்தின் தொடக்கம் 1950-களின் இறுதியில் வீனஸ் டி. கோவிந்தராஜன் அவர்களால் தயாரிக்கப்பட்ட ‘கல்யாண பரிசு’ (1959) திரைப்படத்தின் மூலம் அமைந்தது.
அத்திரைப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்று, இந்த குடும்பத்தின் தேசிய விருது பயணத்திற்கு அடித்தளமிட்டது.
அதைத் தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘ரிக்ஷாக்காரன்’ (1972) திரைப்படம் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்று, இந்திய திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத சாதனையை படைத்தார்.
இந்தச் சிறப்புமிக்க பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் டி.ஜி.தியாகராஜன்.
அவரது தலைமையில் சத்யஜோதி பிலிம்ஸ், தமிழ் சினிமாவின் மிகவும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்தது.
அவர் தயாரித்த ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்று, நடிகர் கமல்ஹாசன் அவர்களின் முதல் தேசிய விருதிற்கும் காரணமாக அமைந்தது.
இது தரமான மற்றும் கலைநயம் மிக்க திரைப்படங்களை உருவாக்குவதில் சத்யஜோதி பிலிம்ஸின் உறுதியை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.
இன்று, மூன்றாம் தலைமுறையாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன், அதே அர்ப்பணிப்புடனும் தொலைநோக்கு பார்வையுடனும் இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களின் தயாரிப்புகள் தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்று வருகின்றன.
‘விஸ்வாசம்’ திரைப்படம் சிறந்த இசையமைப்பிற்கான தேசிய விருதைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு UK National Film Awards-ல் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘கேப்டன் மில்லர்’, தற்போது 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டு விருதுகளை வென்று, சத்யஜோதி பிலிம்ஸின் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு மாபெரும் மைல் கல்லைச் சேர்த்துள்ளது.
இந்த மகத்தான சாதனையை சாத்தியமாக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் தனுஷ், திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் ஒட்டு மொத்த ‘கேப்டன் மில்லர்’ குழுவினருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
மேலும், தனது சிறப்பான நடிப்பிற்காக Special Mention தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற நடிகர் தனுஷுக்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஏழு தசாப்தங்களாக, மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைக்கும், சமூகத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சத்யஜோதி பிலிம்ஸ் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.
‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு கிடைத்த இந்த தேசிய அங்கீகாரம், ஒரு விருதாக மட்டுமல்ல; தரம், நேர்மை மற்றும் தலைமுறைகளைத் தாண்டி மக்களின் மனதில் நிலைத்திருக்கும் கதை சொல்லும் கலையை மையமாகக் கொண்ட சத்யஜோதி பிலிம்ஸின் புகழ்பெற்ற பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும்.
எதிர்காலத்தை நோக்கி மேலும் பல தரமான படைப்புகளை வழங்கும் தனது பயணத்தில், இந்த இரண்டு தேசிய விருதுகளும் சத்யஜோதி பிலிம்ஸின் கடந்த கால சாதனைகளை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், இந்திய சினிமாவின் அழகையும் பெருமையையும் மேலும் உயர்த்தும் திரைப்படங்களை உருவாக்கும் புதிய உத்வேகமாகவும் அமைகின்றன.
’Captain Miller’ Earns Two National Honours, Further Strengthening Sathya Jyothi Films’ Legacy of Excellence.
Three Generations. Seven Decades. One Enduring Legacy of National Recognition.
The 72nd National Film Awards have added another glorious chapter to the illustrious journey of Sathya Jyothi Films, as Captain Miller has earned two prestigious honours on the national stage. The film has been recognised with the award for Best Feature Film Promoting National, Social and Environmental Values, while Dhanush has been honoured with a Special Mention for his powerful performance, making it a proud and memorable occasion for everyone associated with the film.
For Sathya Jyothi Films, these accolades represent far more than a moment of celebration. They reaffirm a cinematic legacy built over seven decades, spanning three generations of filmmakers who have consistently championed meaningful storytelling, artistic excellence, and socially relevant cinema.
The foundation of this remarkable journey dates back to the late 1950s with Venus T. Govindarajan, whose landmark production Kalyana Parisu (1959) earned the National Award for Best Feature Film in Tamil. The family’s proud association with National Award-winning cinema continued with R.M. Veerappan’s Rickshawkaran (1972), which brought Makkal Thilagam M.G. Ramachandran the National Award for Best Actor, marking another historic milestone in the family’s contribution to Indian cinema.
Carrying this rich heritage forward, T.G. Thyagarajan transformed Sathya Jyothi Films into one of Tamil cinema’s most respected production banners. His critically acclaimed production Moondram Pirai went on to win three National Film Awards, including the first National Award of Kamal Haasan’s illustrious career, reinforcing the banner’s unwavering commitment to producing cinema of exceptional artistic merit.
Today, the third generation, Sendhil Thyagarajan and Arjun Thyagarajan, continues to uphold that enduring legacy with the same passion and vision. Their productions have consistently earned both audience appreciation and critical acclaim. Viswasam received the National Award for Best Music Direction, and now Captain Miller has further strengthened the banner’s remarkable legacy by securing two honours at the 72nd National Film Awards, following its international recognition at the UK National Film Awards in 2024.
Sathya Jyothi Films extends its heartfelt gratitude to director Arun Matheswaran, actor Dhanush, the entire cast, technicians, creative collaborators, and every member of the Captain Miller team whose unconditional dedication and collective vision made this achievement possible. The production house also congratulates Dhanush on receiving the Special Mention, an honour that further celebrates the passion and commitment that went into bringing this ambitious story to life.
For over seven decades, Sathya Jyothi Films has remained steadfast in its pursuit of cinema that entertains, inspires, and creates a lasting impact on society. The National recognition for Captain Miller is not merely another accolade for the banner, but a continuation of a legacy defined by excellence, integrity, and a deep commitment to storytelling that transcends generations.
As Sathya Jyothi Films looks ahead to the future, these twin National honours stand as both a celebration of its remarkable journey and an inspiration to continue creating films that reflect with audiences while enriching the beauty of Indian cinema.









