full screen background image

எழுத்தாளர் சங்கத் தேர்தலில் இயக்குநர் சேரன் அணி பெரும் வெற்றி!

எழுத்தாளர் சங்கத் தேர்தலில் இயக்குநர் சேரன் அணி பெரும் வெற்றி!

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் இயக்குநர் சேரன் தலைமையிலான குழு அதிகப்படியான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். 

அந்த வகையில் மறைந்த இயக்குனர் கே பாக்யராஜ் தலைமையில் இருந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவடைந்ததால் இந்த சங்கத்திற்கு புதிதாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வேட்பு மன தாக்களுக்கு முதல் நாள் எதிர்பாராத விதமாக இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார். 

இதை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று வாக்குப் பதிவு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில் மறைந்த இயக்குனர் கே பாக்யராஜ் தன்னுடைய தலைமையில் யார் யார் போட்டியிட வேண்டும் என்று ஒரு லிஸ்ட்டை தான் இறப்பதற்கு முதல் நாள் எழுதி வைத்திருந்தார்.

அந்த பட்டியலில் இருந்தவர்களில் இரண்டு பேரைத் தவிர மீதி அனைவரும் நம்ம கே பாக்யராஜ் அணி என்ற பெயரில் இந்தத் தேர்தலில் ஒரு குழுவாக போட்டியிட்டனர்.

சென்ற தேர்தலில் இயக்குநர் கே. பாக்யராஜை எதிர்த்துப் போட்டியிட்ட குழுவினரும், இந்த முறை ‘திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி’ என்கின்ற பெயரில் ஒரு குழுவாகப் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு என்று காலை வடபழனி இசை கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தவுடன் ஐந்து மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இரவு 10:30 மணிக்கு அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் முடிந்து முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டன.

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரம் வருமாறு :

தலைவர் வேட்பாளர்கள்:
மொத்தம் பதிவான வாக்குகள் – 422

01.சேரன் – 279 (வெற்றி)
02.வி.சி.குகநாதன் – 156

துணைத் தலைவர் வேட்பாளர்கள்:
மொத்தம் பதிவான வாக்குகள் – 422

01.சமுத்திரக்கனி – 258 (வெற்றி)
02.சினேகன் – 228 (வெற்றி)
03.யார் கண்ணன் – 179
04.ஏ.வெங்கடேஷ் – 178

செல்லாத வாக்குகள் – 9

பொதுச் செயலாளர் வேட்பாளர்கள்:
மொத்தம் பதிவான வாக்குகள் – 422

01.பட்டுக்கோட்டை பிரபாகர் – 240 (வெற்றி)
02.மனோஜ் குமார் – 193

பொருளாளர் வேட்பாளர்கள்:
மொத்தம் பதிவான வாக்குகள் – 422

01.ஆர்.சுந்தர்ராஜன் – 254 (வெற்றி)
02.லியாகத் அலிகான் – 179

இணைச் செயலாளர் வேட்பாளர்கள் :

01.பாஸ்கர் சக்தி

02.வி.பிரபாகர்

03.கவிஞர் முத்துலிங்கம்

04. ரவி மரியா

செயற்குழு உறுப்பினர்கள் பெற்ற மொத்த வாக்குகள்:-

01.விக்கிரமன்-318 (வெற்றி)
02.பழனி பாரதி- 277 (வெற்றி)
03.உதயகுமார்- 255 (வெற்றி)
04.பேரரசு- 249 (வெற்றி)
05.வேல்முருகன்- 248 (வெற்றி)
06.சிங்கம் புலி அண்ணாவி- 247 (வெற்றி)
07.சாய் ரமணி- 245 (வெற்றி)
08.விவேகா- 228 (வெற்றி)
09.சரண்- 226 (வெற்றி)
10.மங்கை அரிராஜன்- 214 (வெற்றி)
11.அனுமோகன்- 212 (வெற்றி)
12. N.S.ரமேஷ் கண்ணா- 205 (வெற்றி)

13.லட்சுமி ராமகிருஷ்ணன்- 201
14.செந்தில்நாதன்- 200
15.சலங்கை துரை- 191
16.சரவணன் சுப்பையா- 188
17.ஜெயபிரகாஷ்- 183
18.காரைக்குடி நாராயணன்- 179
19.ரஞ்சித் குமார்- 174
20.சின்னி ஜெயந்த்- 169
21.எழுச்சூர் அரவிந்தன்- 167
22.கதாக திருமாவளவன்- 165
23.சோமசுந்தரம்- 136

செல்லாத ஓட்டுக்கள் -10

வெற்றி பெற்ற நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Our Score