ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், IMDb வெளியிட்டுள்ள “Most Anticipated New Indian Movies and Shows” பட்டியலில் 11.1% ரியல் டைம் பிரபலத்தன்மை மதிப்பெண்ணுடன் மூன்றாவது இடத்தை இந்த திரைப்படம் பிடித்துள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், ஆரம்ப அறிவிப்பிலிருந்தே நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சியில் மறக்க முடியாத பங்களிப்பை வழங்கிய ஜி.டி. நாயுடுவின் சாதனைகளை புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
‘ராக்கெட்ரி’ திரைப்படத்தை தயாரித்த குழுவின் அடுத்த முக்கிய படைப்பாக உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
அவருடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைய்ன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக மாறியிருக்கும் தோற்றம் ரசிகர்களிடையே ஏற்கனவே பேசுபொருளாகியுள்ளது.
சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், அதனைத் தொடர்ந்து டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
IMDb தரவரிசையில் டாப்-3 இடத்தைப் பிடித்திருப்பது, இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமா வட்டாரங்களும் அதிக கவனம் செலுத்தி வருவதை வெளிப்படுத்துகிறது. வரலாறு, அறிவியல், புதுமை மற்றும் தேசப்பற்று ஆகிய அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஒரு சாதனையாளரின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், அவரது சிந்தனை மற்றும் சமூகப் பங்களிப்பையும் திரையில் பதிவு செய்யவிருக்கிறது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஜி.டி.என்.’, வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் குழு:
திரைக்கதை: கிருஷ்ணகுமார் ராமகுமார், ஆர். மாதவன்
இயக்கம்: கிருஷ்ணகுமார் ராமகுமார்
ஒளிப்பதிவு & கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அரவிந்த் கமலநாதன்
இசை: கோவிந்த் வசந்தா
படத்தொகுப்பு: பிஜித் பாலா
நிர்வாகத் தயாரிப்பாளர்: முரளிதரன்
தயாரிப்பு மேலாளர்: ஹக்கிம் சுலைமான்
வசனம்: முகில்
தயாரிப்பு வடிவமைப்பு: சிரில் குருவில்லா
ஆடை வடிவமைப்பு: ஜிஷாத் ஷம்சுதீன்
ஒலி வடிவமைப்பு & தயாரிப்பு ஒலி கலவை: சித்தார்த் சதாசிவ்
தலைமை மேக்கப் கலைஞர்: ரஞ்சித் அம்பாடி
பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, டி ஒன்

R. Madhavan’s GDN Climbs to No. 3 on IMDb’s Most Anticipated Indian Movies List Ahead of August 7 Release
With its worldwide theatrical release just weeks away, R. Madhavan’s highly anticipated biographical drama GDN has secured the third position on IMDb’s “Most Anticipated New Indian Movies and Shows” list, earning an impressive 11.1% real-time popularity score.
The film chronicles the extraordinary life of G.D. Naidu, one of India’s greatest inventors, industrial pioneers, and visionaries. Since its announcement, GDN has generated significant excitement among audiences across the country, with moviegoers eagerly awaiting the inspiring story of the man often celebrated as the “Edison of India.”
Produced by the makers of the acclaimed Rocketry: The Nambi Effect, GDN is written and directed by Krishnakumar Ramakumar. The film is jointly produced by Varghese Moolan, Vijay Moolan, Sarita Madhavan, and R. Madhavan.
Leading the cast, R. Madhavan portrays the legendary G.D. Naidu in what is being hailed as one of his most transformative performances. The film also stars Sathyaraj, Jayaram, Priyamani, Dushara Vijayan, Vinay Rai, Thambi Ramaiah, Nandhalal, DJ Arunachalam, Sheela, Karunakaran, Muralidharan, Aditi Balan, Mohan Raman, Kanika, Ramesh Thilak, Karl Andrew Harte, and Richard Bhakti Klein in pivotal roles.
The recently held grand trailer launch at the Kari Motor Speedway in Coimbatore, coupled with the overwhelmingly positive response to the trailer, has further heightened anticipation for the film.
Securing a place among IMDb’s top three most anticipated Indian titles underscores the growing excitement surrounding GDN. Beyond being a biographical drama, the film celebrates G.D. Naidu’s remarkable contributions to innovation, technology, industry, perseverance, ambition, and patriotism, introducing his inspiring legacy to audiences across generations.
With its compelling narrative, rich historical backdrop, large-scale production values, and Madhavan’s remarkable transformation into the iconic inventor, GDN has emerged as one of the most eagerly awaited Indian films of the year.
The makers have officially announced that GDN will release in theatres worldwide on August 7.
Technical Crew
Writer: Krishnakumar Ramakumar & R. Madhavan
Director: Krishnakumar Ramakumar
Director of Photography & Creative Producer: Aravind Kamalanathan
Music: Govind Vasantha
Editor: Bijith Bala
Executive Producer: Muralidharan
Production Manager: Hakkim Sulaiman
Dialogues: Mugil
Production Designer: Cyril Kuruvilla
Costume Designer: Jishad Shamsudheen
Sound Design & Production Sound Mix: Siddharth Sadasiv
Chief Makeup Artist: Ranjith Ambady
PRO – Suresh Chandra, D’one









