இன்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப் பதிவு கலவரம் ஏதுமில்லாமல் அமைதியாகவே நடந்து முடிந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 73% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் பதிவான வாக்குகளின் விபரம் :
1. மத்திய சென்னை – 60.9%
2. தென் சென்னை – 57.86%
3. வட சென்னை – 64.63%
4. திருவள்ளூர்- 74.75%
5. வேலூர் – 72.32%
6. அரக்கோணம் – 77.02)%
7. காஞ்சிபுரம் – 64.08%
8. ஸ்ரீபெரும்புதூர் – 61.19%
9. கிருஷ்ணகிரி – 77.33%
10. தருமபுரி – 80.99%
11. திருவண்ணாமலை – 77.48%
12. ஆரணி – 78.66%
13. விழுப்புரம் – 76.02%
14. கள்ளக்குறிச்சி – 77.23%
15. சேலம் – 77.29%
16. நாமக்கல் 79.15%
17.ஈரோடு – 75.61%
18. திருப்பூர்- 71.26%
19. நீலகிரி – 74.3%
20.கோவை – 68.94%
21.பொள்ளாச்சி – 72.84%
22. திண்டுக்கல் – 78.29%
23. கரூர் – 79.88%
24. திருச்சி – 70.43%
25. பெரம்பலூர் – 80.12%
26. கடலூர் – 77.6%
27. சிதம்பரம் – 79.85%
28. மயிலாடுதுறை – 75.4%
29. மதுரை – 65.46%
30. தேனி – 72.56%
31. விருதுநகர் – 72.19%
32. ராமநாதபுரம் – 68.84%
33. தூத்துக்குடி – 69.12%
34. தென்காசி – 74.3%
35. திருநெல்வேலி – 66.59%
36. குமரி – 65.15%
37. தஞ்சை – 75.02%
38. நாகப்பட்டினம் – 76.69%
39. சிவகங்கை – 71.47
இதில் சென்னையில் இருக்கும் தொகுதிகளான வடசென்னையில் 64.58 சதவிகிதமும், தென்சென்னையில் 59.86 சதவிகிதமும், மத்திய சென்னையில் 62.23 சதவிகிதமும் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் அதிகப்பட்சமாக தர்மபுரியில் மட்டும் 79.32 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
புதுச்சேரி தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இடைத்தேர்தல் நடைபெறும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 62 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
படித்தவர்கள் அதிகம் நிரம்பிய தமிழ்நாட்டின் தலைநகரிலேயே இத்தனை சதவிகிதம் குறைவான வாக்குப் பதிவு நடந்திருப்பது உண்மையிலேயே மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஒரு நாட்டின் தலையெழுத்துடன் கடைசி குடிமகனின் வாழ்க்கையையும் மாற்றும் அதிகாரமிக்க ஆட்சியை தேர்வு செய்வதில்கூட நாட்டு மக்கள் அக்கறையில்லாமல் இருப்பது மிகவும் கேவலமாக இருக்கிறது.
மற்ற மாநிலங்களில் இன்று நடைபெற்ற வாக்குப் பதிவின் சதவிகித கணக்கு..
Rajasthan: 59.64 (5 seats)
Puducherry-83 (1 seat)
Bihar-60 (7 seats)
Chattisgarh-62.5 (7 seats)
Assam-77.05 (6 seats)
Jharkhand-63.4 (4 seats)
MP-64.4 (10 seats)
WB-82 (6seats)
UP-58.58 (12 seats)
Maharashtra: 55.33 (19 seats)
முழு விபரங்கள் நாளைதான் தெரியும்..!
இன்றைய வாக்குப் பதிவு இவ்வளவு அமைதியாக நடக்க காரணமாக இருந்த இந்தியத் தேர்தல் கமிஷனுக்கு எமது நன்றிகள்..!