நாளை ஏப்ரல் 25 வெள்ளியன்று 7 படங்கள் ரிலீசாகப் போகின்றன.
1. என்னமோ ஏதோ
கவுதம் கார்த்திக், நிகிஷா படேல், ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள படம் ‘என்னமோ ஏதோ’. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஆல முதலாந்தி’ என்ற படத்தின் தமிழ்ப் பதிப்பு. ரவி தியாகராஜன் இயக்கி உள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். ரவிபிரசாத் யூனிட்டின் பி.வி.பிரசாத் தயாரித்து உள்ளார்.
2. வாயை மூடிப் பேசவும்
‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்துக்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கி உள்ள படம் ‘வாயை மூடி பேசவும்’. தமிழ், மலையாளம் என்று இரு மொழிகளில் தயாராகி உள்ள இந்தப் படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இவருக்கு ஜோடி நஸ்ரியா. பாண்டியராஜன், மதுபாலா இருவருக்கும் வலுவான கேரக்டர்கள் இருக்காம். எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி மோகன்.
3. போங்கடி நீங்களும் உங்க காதலும்
‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தில் ஹீரோவாக நடித்த ராமகிருஷ்ணன் இயக்கி நடித்துள்ள படம் இது. ஆத்மியா, காருண்யா என்று இரண்டு ஹீரோயின்கள். மற்றும் ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சென்ராயன், சாமிநாதன் போன்றோர் நடித்திருக்கிறார்கள். இசை கண்ணன். பாடல்களை அண்ணாமலை எழுதியிருக்கிறார். எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதி்வு செய்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.
4. என்னமோ நடக்குது
வசந்த் அண்ட் கோ கடை முதலாளி ஹெச்.வசந்தகுமாரின் மூத்த மகன் விஜய வசந்த் நடிக்க அவரது இளைய மகன் வினோத் குமார் தயாரித்துள்ள திகில் படம் என்னமோ நடக்குது. ‘சாட்டை’ படத்தில் நடித்த மகிமா இதில் ஹீரோயின். ராஜபாண்டி இயக்கியிருக்கிறார்.
இது இல்லாமல் ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2’, மற்றும் ‘சன் ஆஃப் காட்’, மற்றும் ‘நர நாயகி’ என்ற 3 ஆங்கில டப்பிங் படங்களும் ரிலீஸாகின்றன.
சென்ற வாரம் வெளிவந்த படங்களே இன்னமும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ‘தெனாலிராமன்’, ‘நான் சிகப்பு மனிதன்’ இந்த இரண்டு படங்களையும் தாண்டி இவைகள் ஜெயிக்க முடியுமா என்று பார்ப்போம்.!