full screen background image

ஜி.வி.பிரகாஷின் ‘வெக்கை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜி.வி.பிரகாஷின் ‘வெக்கை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சென்னை நகரின் பரபரப்பான சாலைகளில் அன்றாடம் நிகழும் சிறிய சாலைத் தகராறுகள், சில நேரங்களில் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சாதாரண சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் தான் ‘வெக்கை’.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் வழங்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

பா.இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் தமிழ் பிரபாவுடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனங்களை உருவாக்கியுள்ளார்.

வெளியானுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சென்னை நகரின் பரபரப்பான சாலையின் நடுவே ஜி.வி. பிரகாஷ் மற்றும் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் தருணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சாதாரண சாலைத் தகராறின் பின்னால் மறைந்திருக்கும் கோபம், அகங்காரம் மற்றும் அதன் விளைவுகள் குறித்த ஆர்வத்தை அந்த போஸ்டர் தூண்டியுள்ளது.

“ஒரு கண நேர கோபம் எத்தனை வாழ்க்கைகளை மாற்றிவிடும்?” என்ற கேள்வியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வெக்கை’, மனிதர்களின் உளவியல் சிக்கல்கள், உணர்வுகள், உறவுகள் மற்றும் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளை பரபரப்பான திரைக்கதையுடன் இணைக்கும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

சென்னை நகரை கதையின் முக்கிய பின்னணியாகக் கொண்டுள்ள இப்படத்தில், துடிப்பும் வேகமும் நிறைந்த இளைஞராக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீநாத் பாஸி நடித்திருக்கிறார். அவர்களுடன் ஷிவானி ராஜசேகர், சுனில், மைம் கோபி, லிஷா சின்னு, லட்சுமிப்ரியா சந்திரமௌலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவையும், செல்வா ஆர்.கே. படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள இந்தப் படம், அதிரடி, காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் இணைந்த முழுமையான வணிக திரைப்படமாக உருவாகியுள்ளது.

வித்தியாசமான கருவையும், நகர வாழ்க்கையின் யதார்த்தத்தையும் இணைக்கும் ‘வெக்கை’, தமிழ் சினிமாவில் புதிய விவாதங்களை உருவாக்கும் படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

A Moment of Anger… A Turning Point in Many Lives! GV Prakash’s ‘Vekkai’ First Look Grabs Attention

 

Road rage incidents are a common sight on the busy streets of Chennai, often appearing insignificant but sometimes leading to life-changing consequences. Exploring this very premise is the upcoming action thriller Vekkai.

Starring actor-composer G.V. Prakash Kumar in the lead role, the film has now unveiled its first-look poster, which has already sparked curiosity among movie lovers. The project is presented by Pa. Ranjith and jointly produced by Neelam Productions and Divine Productions.

Akiran Moses, who has worked as a longtime associate director of Pa. Ranjith, makes his directorial debut with Vekkai. He has also co-written the film with Tamizh Prabha.

The striking first-look poster features G.V. Prakash Kumar and Malayalam actor Sreenath Bhasi confronting each other in the middle of a bustling Chennai street. The visual hints at the tension, ego clashes, and unforeseen consequences that can emerge from an ordinary road-side conflict.

Built around the thought-provoking question, “How many lives can be altered by a single moment of anger?”Vekkai is an action thriller that delves into human emotions, psychological conflicts, relationships, and the realities of everyday urban life.

Set against the backdrop of Chennai, the film features G.V. Prakash Kumar as a spirited and energetic young man, while Sreenath Bhasi plays a pivotal role. The cast also includes Shivani Rajasekhar, Sunil, Mime Gopi, Lisha Chinnu, Lakshmipriyaa Chandramouli, and several others in significant roles.

The film’s music has been composed by G.V. Prakash Kumar, with cinematography by Roopesh Shaji and editing by Selva RK. Action sequences have been choreographed by Stunner Sam. Blending action, romance, humour, and family emotions, Vekkai promises to be a complete commercial entertainer.

With its unique premise and realistic portrayal of urban life, Vekkai is already generating considerable buzz and is expected to emerge as a thought-provoking addition to contemporary Tamil cinema.

Our Score