full screen background image

சினிமா தியேட்டர்களில் காலை, பகல் காட்சிகள் ரத்து.. – வாக்குப் பதிவு எதிரொலி..!

சினிமா தியேட்டர்களில் காலை, பகல் காட்சிகள் ரத்து.. – வாக்குப் பதிவு எதிரொலி..!

நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப் பதிவு நடப்பதையொட்டி நாளை ஏப்ரல் 24, வியாழக்கிழமையன்று தமிழகம் முழுவதிலும் இருக்கும் சினிமா தியேட்டர்களில் காலை காட்சி, மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் ஏற்கெனவே அனைத்து அரசு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்த உத்தரவி்ன்படி நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டாக வேண்டிய சூழல் இருப்பதால் திரையரங்குகளில் 2 காட்சிகளை ரத்து செய்ய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவெடுத்திருக்கிறார்கள்.

காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரைக்கும் ஓட்டுப் பதிவு நடைபெறும் என்றாலும், மாலை காட்சியும், இரவு காட்சியும் எப்போதும்போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Our Score