full screen background image

‘வெப்’ படத்துக்காக ஒரு பாடலைப் பாடியிருக்கும் நடிகை ஆண்ட்ரியா..!

‘வெப்’ படத்துக்காக ஒரு பாடலைப் பாடியிருக்கும் நடிகை ஆண்ட்ரியா..!

‘ஓ சொல்றியா மாமா..’ பாடலின் வெற்றியை தொடர்ந்து வெப்’ என்ற திரைப்படத்துக்காக நடிகை ஆண்ட்ரியா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

இந்த ‘வெப்’ படத்தை வேலன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.எம்.முனிவேலன் தயாரித்துள்ளார்.

‘நட்டி’ என்கிற நடராஜன் சுப்பிரமணியம் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத் தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். அறிமுக இயக்குநரான ஹாரூன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஐ.டி. தொழில் துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர்  ஹாரூன்.

சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் மிகப் பெரிய ஹிட் அடித்த ‘ஓ சொல்றியா மாமா..’ பாடலை பாடியவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் தற்போது இந்த ‘வெப்’ படத்துக்காக 

“வீக் டே ஃபுல்லா வேலை செய்ய கழுத்துல டைய்..

வீக்கெண்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆகிடலாம் ஹை..

இரவு முடியும்வரை… நீ ஆடு.. “

எனும் பப் பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடலை மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார். சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த மாத இறுதியில் படத்தின் பாடலை வெளியிடவும், அடுத்த மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Our Score