ஸ்ரீசரவணா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் B.சதிஷ் குமார் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் புதிய படம் ‘தீர்க்கதரிசி’.
படத்திற்கு படம் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பாராட்டை பெற்றிருக்கும் நடிகர் அஜ்மல் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார்.
நடிகர் அஜ்மலுடன், நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த், ‘மத்திய சென்னை’, ‘காட்டு பய சார் இந்த காளி’ படங்களின் மூலம் பலரின் பாராட்டை பெற்ற நடிகர் ஜெய்வந்த் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
தயாரிப்பு – B.சதிஷ் குமார் (ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்), இயக்கம் – P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி, இசை – பாலசுப்ரமணியம்.G, ஒளிப்பதிவு – ஜெ.லட்சுமண் குமார், கலை இயக்கம் – ப.ராஜூ, படத் தொகுப்பு – C.K. ரஞ்சித் குமார், பாடல்கள் – விவேகா, விவேக், சண்டை இயக்கம் – டான் அசோக், தயாரிப்பு மேற்பார்வை – S.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக தயாரிப்பு – ராமு.M, தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் – R.R. தீபன் ராஜ், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).
இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி இருவரும் இணைந்து இயக்குகிறார்கள்.
‘தீர்க்கதரிசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் இனிதே துவங்கியது.










