full screen background image

இயக்குநர் கீது மோகன்தாஸை கொண்டாடிய ‘டாக்ஸிக்’ படக் குழு

இயக்குநர் கீது மோகன்தாஸை கொண்டாடிய ‘டாக்ஸிக்’ படக் குழு

இந்திய சினிமாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் இயக்குநர் கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, படக் குழு வெளியிட்டுள்ள பிரத்யேக பின்னணிக் காணொலி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

பொதுவாக ஒரு திரைப்படத்தின் நட்சத்திரங்களே அதிகம் பேசப்படும் நிலையில், இந்த முறை ‘டாக்ஸிக்’ படக் குழு படைப்பின் பின்னால் இருக்கும் இயக்குநரின் அர்ப்பணிப்பையும் தலைமைத்துவத்தையும் முன்னிறுத்தியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள BTS (Behind The Scenes) காணொலியில், கீது மோகன்தாஸ் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், பிரம்மாண்டமான திரைப்படத் தயாரிப்பை முன்னின்று வழிநடத்தும் திறமையான தலைவராகவும் காட்சியளிக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை வடிவமைப்பது, நடிகர்களின் நடிப்பை செதுக்குவது, சிக்கலான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது, தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது என ஒவ்வொரு தருணத்திலும் அவரது ஈடுபாடு தெளிவாக பதிவாகியுள்ளது.

“வித்தியாசமாக தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும், வார்த்தைகளை விட அதிகம் பேசிய ஒவ்வொரு மௌனத்தின் பின்னாலும் அவர் இருந்தார்” என்ற வாழ்த்து வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொலி, கீது மோகன்தாஸின் படைப்பாற்றலுக்கும் அவரது தலைமைப் பண்புக்கும் படக்குழுவினர் செலுத்திய மரியாதையாக பார்க்கப்படுகிறது.

இந்திய திரைப்பட உலகில் மிக அரிதாகவே பெண்கள் இத்தகைய சர்வதேச தரத்திலான பிரம்மாண்டமான படைப்புகளை இயக்கும் வாய்ப்பு பெறுகின்றனர். அந்த வரிசையில், உலகளாவிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு உருவாகும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை கீது மோகன்தாஸ் திறம்பட வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

‘டாக்ஸிக்: எ ஃபேரிடேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அதன் பிரம்மாண்டம் மற்றும் வித்தியாசமான கலைநயத்தால் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

உலகம் முழுவதும் விரைவில் வெளியாகவுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், இந்திய சினிமாவின் அடுத்த மிகப்பெரிய திரை அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

The Woman Power Behind Toxic’s Grand Vision! Team Celebrates Director Geetu Mohandas with Special BTS Video

The team of the highly anticipated film Toxic has paid a special tribute to director Geetu Mohandas on her birthday by releasing an exclusive behind-the-scenes (BTS) video that highlights her remarkable contribution to the making of the film.

While film promotions often focus on the stars in front of the camera, the Toxic team has chosen to spotlight the creative force behind the project. The newly released footage offers a rare look at Geetu Mohandas’ leadership, dedication, and artistic vision as she steers one of the most ambitious productions in Indian cinema.

The BTS video captures Geetu actively shaping scenes, guiding actors through performances, coordinating large-scale action sequences, and working closely with the technical crew. More than just a filmmaker, she is seen as a commanding leader overseeing every aspect of the production with confidence and precision.

Accompanied by the message, “Behind every shot that hit different, every silence that said more than dialogue ever could, there she was,” the video serves as a heartfelt tribute from the team, recognizing her creativity, commitment, and hands-on approach to filmmaking.

At a time when only a handful of women filmmakers in India have the opportunity to helm projects of such international scale and ambition, Geetu Mohandas stands out as a trailblazer. The footage showcases her ability to balance artistic vision with the demands of a massive production, reaffirming her reputation as one of the industry’s most distinctive storytellers.

Toxic: A Fairytale for Grown-Ups stars Yash alongside Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria. Produced by KVN Productions and Monster Mind Creations, the film continues to generate excitement for its scale, cinematic ambition, and unique storytelling approach.

Set for a worldwide release soon, Toxic is widely regarded as one of the most eagerly awaited films in Indian cinema, with audiences across the globe looking forward to experiencing its grand spectacle on the big screen.

 

Our Score