அங்கே.. இங்கே.. என்று ஓடி ஓடி களைத்துப் போயிருந்த கெளதம் வாசுதேவ் மேனனை இழுத்துப் பிடித்து தனது அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் ‘தல’ அஜீத்.
55-வது படமாக வெளிவரப் போகும் இந்த இருவரின் கூட்டணி இன்று துவங்கிவிட்டது.. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு இரண்டாவது முறையாகவும் ஒரு பெரிய வாய்ப்பை அளித்திருக்கிறார் அஜீத். முந்தைய படமான ‘வீரம்’ சரியாகப் போகவில்லை.. சில இடங்களில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம்.. பல இடங்களில் தியேட்டர்காரர்களுக்கு நஷ்டம் என்று சினிமா அகராதிப்படி தோல்வி படமாகவே பதிவாகியுள்ளது.
அதனால் இந்தப் படத்தை ‘மங்காத்தா’ போல் பரபரவென தயாரிக்க கெளதமின் துணையை நாடியிருக்கிறார் அஜீத். இதில் அஜீத்துக்கு ஜோடி அனுஷ்கா என்பது இப்போதுவரையிலும் உறுதி.. சில படங்களில் இசையமைத்து கெளதமுடன் ‘டூ’ விட்டுப் போன ஹாரிஸ் ஜெயராஜே இந்தப் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்.
ஸ்கிரிப்ட் ரெடியாகலை.. ஷூட்டிங் துவங்க இ்ன்னும் கொஞ்ச நாளாகும் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டாலும் இன்றைய புதனை விட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீஷிர்டி சாய்பாபா கோவிலில் இன்று பூஜையுடன் படத்தைத் துவக்கிவிட்டார்கள்..!
தற்போதைய டிரெண்ட்டின்படி படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கவில்லையாம். ‘கிரைம் தி போலீஸ்’ என்று தற்காலிக பெயர் சூட்டி போஸ்டர் மட்டும் தயாராகி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
படத்தின் தொழில் நுடப்க் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய முழு விவரம் விரைவில் வெளியாகும். அதுவரையில் காத்திருக்கவும் என்கிறது பட யுனிட்..!














