என்ன ஆச்சு இந்த நடிகைகளுக்கு..?
முதலில் அஞ்சலி.. அடுத்து ஜனனி ஐயர்.. அதற்கடுத்து இனியா.. இப்போது ஹன்ஸிகா..
தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இந்த தேவதைகளின் கண்களில் கண்ணீரைக்கூட பார்க்க நினைக்காத ரசிகர்கள் நிறைந்த கோடம்பாக்கத்திலேயே இவர்களை வைத்து துளியும் கஷ்டப்படாமல் சம்பாதிக்க நினைக்கும் அல்பங்களும் இருக்கிறார்கள் போலும்..!
“நான்தான் ஹன்ஸிகாவின் மேனேஜர். ஹன்ஸிகா எனது பாக்கெட்டில் உள்ளது. அவங்க கால்ஷீட் டேட்ஸ் வேணும்னா என்கிட்ட கேளுங்க. நான் வாங்கித் தரேன்.. நான் சொல்லலைன்னா அது கிடைக்காது..” – இப்படி வாயாலேயே பந்தக்கால் நட்டு.. முகூர்த்தம் முடிந்தவுடன்.. மொய்ப் பணம் முழுவதையும் ராவிவிட்டுப் போகவும் சில பார்ட்டிகள் கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறதாம்..
செய்திகளும், புகார்களும் ஹன்ஸிகாவுக்கும், அவரது மேனேஜருமான அவரது அம்மாவுக்கும் பறந்து வர… இன்றைக்கு ஒரு மெயிலை அனைவருக்கும் தட்டிவிட்டிருக்கிறார்கள்…
இனியாச்சும் ஹன்ஸிகா மேனேஜர் நான்தான்னு யார் சொன்னாலும் நம்பாதீங்க கண்ணுகளா..!