லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013-ல் ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ என கேட்ட பவர் ஸ்டார் தற்போது ஒரு புதுவிதமான ‘லட்டு’ ஒன்றை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார்.
தற்போது பவர் ஸ்டார் அவரது இயக்கத்தில் உருவாக உள்ள புது படத்திற்கு ‘பவர் லட்டு’ என பெயர் வைத்துள்ளார்.
இந்தப் படத்தை மாபெரும் பொருட்செலவில் L.V.Creations சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கிறார், இவர் இதற்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த ‘முன் தினம்’ தயாரித்து இயக்கியுள்ளார். அத்திரைப்படம் மிக விரைவில் வெளிவர உள்ளது.
இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு. இவர் ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’, ‘ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ்’ ஆகிய படங்களின் இயக்குநர் ஆவார். வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த் மோகன்ராஜ் இசையமைக்கின்றார். இந்தப் படத்தை 2-S Entertainment சார்பில் எஸ்.வினோத் குமார் வெளியிட உள்ளார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் திரைப்பட நகைச்சுவை ஜாம்பவான்களின் ஒருவரான ‘நகைச்சுவை தென்றல்’ செந்தில் அவர்கள் வெளியிட பவர் ஸ்டாரும் தயாரிப்பாளரும் பெற்றுக் கொண்டனர்.










