full screen background image

வசூலைக் குவிக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்..!

வசூலைக் குவிக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்..!

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் கெளதம் மேனனின் முந்தைய படங்களின் சாயல் போல இருக்கிறது என்கிற பேச்சு இருந்தாலும் இப்போதுவரையிலும் வசூலில் குறை வைக்கவில்லை..

‘ஐ’ படத்திற்கு பின்பு இப்போது வசூலை வாரிக் குவிப்பது ‘என்னை அறிந்தால்’ படம்தான் என்கிறது கோலிவுட் புள்ளி விபரங்கள்.

உலக அளவில் என்னை அறிந்தால் முதல் 4 நாட்களில் 53.65 கோடியை வசூலித்திருப்பதாக தெரிகிறது.இதில் தமிழ்நாட்டில் 31.25கோடி(நெட் 24.04 கோடி), கேரளாவில் 2.75 கோடி(நெட்2.5 கோடி) கர்நாடகாவில் 1 கோடி(நெட் 75 லட்சம்) என்று வசூலில் குறைவில்லாமல்தான் இருக்கிறது. இதன்படி முதல் வார முடிவில் என்னை அறிந்தால் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 38.65 கோடியை வசூல் செய்து உள்ளது. 

சர்வதேச அளவில்  என்னை அறிந்தால் 15 கோடியை இந்த 4 நாட்களில் வசூல் செய்து உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் வாரத்தில் அமெரிக்காவில் என்னை அறிந்தால் ரூ.3.10 கோடி வசூலை ஈட்டியுள்ளது.இதற்கு முன் வெளிவந்த அனைத்து அஜித் படங்களின் வசூலையும் இது முறியடித்துள்ளது.

ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் முதல் வாரம் ரூ.90 லடசம் வசூல் செய்து உள்ளது. இங்கிலாந்தில் முதல் வாரம்   1   கோடி   வசூலை   தாண்டியுள்ளது.   மொத்தமாக
வெளிநாட்டு சந்தையில் 15 கோடியை வசூல் செய்து உள்ளது. 

இந்த வாரத் துவக்கத்திலும் படத்திற்கு அனைத்து இடங்களிலுமே கூ்டடம் குறைவில்லாமல் இருக்கிறது. இந்த வார இறுதிக்குள்ளாக இந்தப் படம் 100 கோடி கிளப்பில் சேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score