‘அனேகன்’ படத்திற்கு தடை கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

‘அனேகன்’ படத்திற்கு தடை கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

‘அனேகன்’ திரைப்படத்தில் சலவைத் தொழிலாளர்களை அவமானப்படுத்தும்விதத்தில் வசனங்களும், காட்சிகளும் இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

இப்போது இந்தக் காரணத்திற்காகவே படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி சிலர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்ட நாயனார் மகாசபை தலைவர் எஸ்.மாரிச்செல்வம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ‘அனேகன்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து, வரும் 13-ம் தேதி (நாளை மறுநாள்) வெளிவர இருக்கும் திரைப்படம் ‘அனேகன்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படத்தில் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தை தணிக்கை செய்தபோது வண்ணார் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்படாமல் விடப்பட்டுள்ளன.

இதனால் ‘அனேகன்’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரியும், சில காட்சிகளை நீக்கக் கோரியும் தணிக்கை குழு அதிகாரிகளிடம் கடந்த 4-ம் தேதி புகார் மனு கொடுத்தேன். அந்த மனு மீது அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 13-ம் தேதி திரையிட இருக்கும் அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்…” என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர் அமைப்புகளும் இந்தப் படத்திற்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.

உடன்குடி வில்லிக் குடியிருப்பில் திருக்குறிப்பு தொண்டர் மகா சபையின் சங்க செயல் விளக்கக் கூட்டம் நடந்த்து. இக்கூட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தில் சலவைத் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகல் உள்ளன. அதனை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையேல்.. ‘அனேகன்’ படம் ஓடும் தியேட்டர்களில் குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Our Score