‘‘புலிப்பார்வை’ படத்தை வெளியிடுவதற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் சில நிபந்தனைகள் விதித்துள்ளார். அவர் நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது இது பற்றி பேசினார்.
“புலிப்பார்வை’ படத்தின் இயக்குனர் பிரவின் காந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் நான் அந்த படத்தைப் பார்த்தேன். அதில் சில ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருந்தன. அவற்றை நீக்க வேண்டும் என்று இயக்குனரை நான் கேட்டுக் கொண்டேன்.
ஆனால், அந்தப் படத்தின் இயக்குநர் அந்தக் காட்சிகளை நீக்காமல் அப்படியே அந்த படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளனர். பாடல்கள் வெளியீட்டு விழாவில், எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
முதலில் நான் சொன்ன திருத்தங்களை இயக்குநர் செய்ய வேண்டும். பின்பு அந்த பட விழாவில் எந்த மாணவர்கள் தாக்கப்பட்டார்களோ அந்த மாணவர்களுக்கு ‘புலிப்பார்வை’ படத்தைப் போட்டுக் காட்ட வேண்டும். அவர்கள் படம் பார்த்து, திருப்தி அடைந்து, இசைவு தெரிவித்த பின்னர்தான் அந்தப் படத்தை வெளியிட வேண்டும்…” என்றார் பழ.நெடுமாறன்.