“வந்த பொண்ணுக யாரும் என்னைப் புரிஞ்சுக்கலை..” – சிம்புவின் வருத்தம்..!

“வந்த பொண்ணுக யாரும் என்னைப் புரிஞ்சுக்கலை..” – சிம்புவின் வருத்தம்..!

நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசனின் காதல் பற்றிய எண்ணங்கள் பின்நவீனத்துவத்தின் கூறுகளை கொத்துப் புரோட்டோ போடுவதற்குச் சமமானது.. இன்றைய ‘குமுதம்’ பத்திரிகைக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியும் இதையேதான் காட்டுகிறது..

உங்களைப் பத்தி தப்பாவே நியூஸ் வருதே..?

என்னைப் பத்தி நல்ல நியூஸ் வந்தாதானே அது ஆச்சரியம்..? நான் லவ் பண்றது எல்லாமே பிரேக் அப் ஆகிடுதுன்னு எழுதுறாங்க.. என்னைப் பொறுத்தவரைக்கும் காதல்ங்கிறது கடவுள் மாதிரி. ஒண்ணே ஒண்ணுதான்.. மதங்கள் மாதிரி பொண்ணுகதான் வேற வேற..

நான் வைச்சிருக்கிற காதல் என்னிக்குமே உண்மைதான். வர்ற பொண்ணுகதான் என்னைப் புரிஞ்சுக்காம மாறிக்கிட்டேயிருக்காங்க.. என்னிக்கு என்னோட உண்மையான காதலை ஒரு பொண்ணு புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்குதோ அதுக்காக வெயிட் பண்றேன்..

நான் எல்லோருக்கும் உண்மையாத்தான் இருக்கேன். என்னை விட்டுப் போறவங்க போகட்டும். நான் யாரையும் போர்ஸ் பண்ண மாட்டேன். எல்லாமே அனுபவம்தான். ஆனா நான் இந்த அளவுக்கு மெச்சூர்ட் ஆக அவங்கதான் காரணம்..

என் கழுத்துல தாலி கட்டணும்னு ஒரு பொண்ணு வந்து நின்னா டக்குன்னு கட்டிருவேன். அப்புறம் அந்தப் பொண்ணு ஏதாவது கேட்டுச்சுன்னா ‘ஏம்மா நீதானே கட்டச் சொன்னே’ன்னு கேட்பேன்..

எனக்கு இன்னமும் காதல் மேல நம்பிக்கையிருக்கு. இல்லைன்னா முதல் காதல் தோத்ததுமே நிறுத்தியிருப்பனே..? ஒரு பொண்ணு தப்புப் பண்ணிட்டாங்கறதுக்காக எல்லா பொண்ணையும் கெட்டவங்கன்னு சொல்ல முடியாது.. அந்தப் பொணணுகூட நமக்கு ஒத்துப் போகலை.. அவ்வளவுதான்..”

சத்தியமா முடியல சாமிகளா..!!!

Our Score