வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் அம்மன் அவதாரத்தில் மிரட்டியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி’ டீஸர் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் சரியான அளவில் கலந்த ஒரு பக்கா மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக (Mythological Fantasy Entertainer) தயாராகியுள்ளது.
இந்த ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்பக் குழுவிலும் தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் கை கோர்த்துள்ளனர்.
இப்படத்தின் துள்ளலான பாடல்களுக்கும், பிரம்மாண்ட பின்னணி இசைக்கும் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
கோபி அமர்நாத் தனது கேமரா மூலம் அசாத்திய ஒளியமைப்பில் ஒளிப்பதிவு செய்ய, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார்.
இந்த ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ திரைப்படத்தை குஷ்பூ சுந்தர், குஷ்மிதா கணேஷ், இஷான் சக்சேனா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ இத்திரைப்படம், வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து முக்கிய இந்திய மொழிகளில் பான்-இந்திய (Pan-Indian) திரைப்படமாகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது.









