full screen background image

“ஓட்டுப் போடத் தெரியலை..” – விஜயகாந்தை தாக்கிய இயக்குநர் பாக்யராஜ்

“ஓட்டுப் போடத் தெரியலை..” – விஜயகாந்தை தாக்கிய இயக்குநர் பாக்யராஜ்

அநேகமா ‘துணை முதல்வர்’ படம் வரும்போது இயக்குநர் பாக்யராஜுக்கு செம மண்டகப்படி காத்திருக்குன்னு நினைக்கிறோம்..!

அந்தப் படத்துல இவர் வைச்சிருக்குற சீன் அப்படியே தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும், தற்போதைய தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தை கிண்டல் செய்வது போலவே உள்ளதாம். போதாக்குறைக்கு இன்றைய ‘குமுத’த்திற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியிலும் விஜயகாந்தை கிண்டல் செய்திருக்கிறார் பாக்யராஜ்.

“துணை முதல்வர் படத்துல ஸ்வேதாமேனன்கூட ஜோடி சேர்ந்திருக்கேன். ஜெயராம், ‘காதல்’ சந்தியா, மனோபாலா இன்னும் நிறைய பேர் இருக்காங்க.

படத்துல ஒரு சீன். நாலு மாசத்துக்கு முன்னாடியே  யோசிச்சு வைச்சிருந்தோம். எழுதப் படிக்கத் தெரியாத ஜெயராம், ஓட்டுப் போட போறப்ப.. அவரோட வீட்டம்மா பின்னாடியே போவார். தேர்தல் அதிகாரி அவர்கிட்ட ‘ஓட்டு போடுற இடத்துல ஒருத்தர்தான் இருக்கணும். இன்னொரு சீட் வாங்கிக்கிட்டு பின்னாடி வாங்க’ம்பார். ‘ரெண்டு பேரும் ஒரே ஆளுக்குத்தான போடப் போறோம்.. எதுக்கு இன்னொரு சீட்..? அதுலயே போடறேனே’ம்பார் ஜெயராம்.

நாங்க எதேச்சையா வச்ச இந்த சீன், இப்போ நம்ம எதிர்க்கட்சித் தலைவர் விஷயத்துல ஒர்க் அவுட் ஆகியிருக்கு. அவர் படம் பார்த்தா ‘என்னைய வைச்சுத்தான் காமெடி பண்ணியிருக்காங்க’ன்னு சொல்லலாம். ஆனாலும் எதிர்க் கட்சித் தலைவருக்கு ஓட்டுப் போடத் தெரியலைன்னா என்னத்த சொல்றது..? பாருங்க டிராக் மாறுது.. வேணாம்.. நிறுத்திக்குவோம்.. படத்துல இது மாதிரி நிறைய அரசியல் இருக்கு. ஒகனேக்கல் பக்கம் ஷூட்டிங் போயிட்டு வந்தோம். இனி சட்டசபை சீன் மட்டுமே பாக்கி.. ஜூன் மாதம் ரிலீஸ் பண்ணலாம்ன்னு இருக்கோம்..” என்று பேட்டியளித்திருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.

படம் வரட்டும்.. வைக்கப் போறாங்க ஆப்பு..!

Our Score