full screen background image

‘இசை ஞானி’ இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!

‘இசை ஞானி’ இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!

ஒரு பாடலுக்கு இசையமைக்க ஆறு மாதங்கள் நேரம் எடுத்துக் கொண்டு ஒப்பேற்றும் இசையமைப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு நடுவில்,

ஒரு படத்தில் இருக்கும் ஆறு பாடல்களுக்கான இசையையும் ஒரே நாளில் இசைத்து சாதனை படைத்திருக்கிறார் ‘இசை ஞானி’ இளையராஜா.

மக்கள் நாயகன் ராமராஜன் நடிப்பில் உருவாகி வரும் “கடவுள் தந்த பரிசு” திரைப்படத்திற்காக ஒரே நாளில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்துள்ளார் இசை ஞானி இளையராஜா.

மேலும், அடுத்த ஆறே நாட்களில் அற்புதமான ஆறு பாடல்களையும் பிரமிக்கத்தக்க வகையில் பதிவு செய்து கொடுத்திருக்கிறார் இசை ஞானி இளையராஜா!

இதற்காக படத்தின் நாயகனான ‘மக்கள் நாயகன்’ ராமராஜன், ‘கடவுள் தந்த பரிசு’ படத்தின் இயக்குநர் காசிமாயன், வசனகர்த்தா ராஜகோபால், தயாரிப்பு நிர்வாகி ராம் பிரபு ஆகிய படக் குழுவினருடன் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து, தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு காசி மாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். பத்திரிக்கை தொடர்பு கோவிந்தராஜ்.

விரைவில் படப்பிடிப்பை துவங்கவிருக்கும் இந்தப் படக் குழுவினர், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்!

Our Score