full screen background image

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கி அடுத்த ஞாயிறில் முடியும் கதை ‘ரொம்ப நல்லவன்டா நீ..!’

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கி அடுத்த ஞாயிறில் முடியும் கதை ‘ரொம்ப நல்லவன்டா நீ..!’

சமீபத்தில் ரிலீசான ‘கில்லாடி’, ‘சண்டமாருதம்’ படங்களை தொடர்ந்து ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படம் ‘ரொம்ப நல்லவன்டா நீ’.

இதில் ‘மிர்ச்சி’ செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி பாலா ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இந்தப் படத்தில் சர்வஜித், ஏ.வெங்கடேஷ், ரேகா, சோனா, ரோபோ சங்கர், ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, கனல் கண்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தீபக் குமார் நாயர், ஷெனாய் மேத்யூ இருவர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு மனோ நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் சுரேந்தர் இசை அமைத்துள்ளார். விஜய் எடிட்டிங் செய்துள்ளார். எழுதி, இயக்கியிருக்கிறார் ஏ.வெங்கடேஷ்.

இப்படம் குறித்து இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசும்போது, “ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கி அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு இடையிலான ஒரு வார காலத்தில் சந்திக்கும் ஹீரோ, ஹீரோயீன் இருவருக்குள்ளும் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே இப்படம்..!

அதாவது முன் பின் தெரியாத இரண்டு பேர் சந்திக்கும்போது ஒருபோதும் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அப்படி பகிர்ந்து கொண்டால் அந்த பிரச்சனை மேலும் மேலும் சிக்கலாகும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து முழுக்க, முழுக்க நகைச்சுவை பின்னணியில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்..” என்றார்.

வரும் 6-ஆம் தேதி இத்திரைப்படம் ரிலீஸாகிறது.

Our Score