PGR Creations சார்பில் ‘இனி ஒரு காதல் செய்வோம்’ என்கிற புதிய திரைப்படத்தை பிரபல சினிமா பத்திரிகையாளர் பிரியாபாலு தயாரிக்கிறார்.
இவர் 1974-ம் ஆண்டு முதல் தமிழ்ச் சினிமாவுலகத்துடனும், பத்திரிகையுலகத்துடனும் மிக நெருங்கிய தொடர்புடையவர். ‘சினி விசிட்’ என்ற சினிமா இதழை நடத்தி வந்தவர்.
இப்போது முதன்முறையாக சினிமா தயாரிப்பு தொழிலில் இறங்குகிறார். ‘பி.ஜி.ஆர். கிரியேஷன்ஸ்’ என்கிற சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘இனி ஒரு காதல் செய்வோம்’ என்கிற திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் அரவிந்த்-சந்தோஷ் என்ற இரண்டு புதுமுக நடிகர்கள் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் சில குறும்படங்களில் நடித்த அனுபவம் வாய்ந்தவர்கள். மேலும் கன்னட படவுலகத்தைச் சேர்ந்த நடிகை அர்ச்சனா சிங் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கவிருக்கிறார்கள்.
என்.டி.விமல் ஒளிப்பதிவு செய்கிறார். கேரளாவைச் சேர்ந்த ரேவதி என்ற இளம்பெண் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமாகிறார். பிறைசூடன், அகத்தியன் இருவரும் பாடல்களை எழுதுகின்றனர். அட்சயா, ஆனந்த், ராம்சங்கர் மூவரும் நடனம் அமைக்கிறார்கள். மக்கள் தொடர்பு பணியை மேஜர்தாசன் கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் துவங்கி சென்னையில் பயணமாகி தற்போது ஹைதரபாத்தில் நடந்து வருகிறது.