ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.மாணிக்கம் தயாரித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம் RED FLOWER.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்கிறார். மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் ராம் இசை அமைக்க, படத் தொகுப்பினை அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன்.
இந்தப் படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் நாயகன் விக்னேஷின் கதாபாத்திர வடிவமைப்பும், அவரது தோற்றமும், நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும்! அவரது மறுபிரவேசத்தைச் சுற்றியுள்ள உற்சாகம், பெரியதோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது! அவரை மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்தப் போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இந்திய சினிமாவில் பேசப்படாத புதிய விஷயங்களை பற்றி இப்பபடம் பேசும். காலத்தால் அழியாத காதலை சமகாலக் கூறுகளுடன் கலக்கும் கதைக் களத்துடன் வடிவமைத்துள்ளார் இயக்குநர். “இந்தப் படம் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்று நம்புகிறோம்” என்று இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்துள்ளார்.









