full screen background image

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் ‘யட்சிணி’ திரைப்படம்!

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் ‘யட்சிணி’ திரைப்படம்!

இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் புதிய ஹாரர் த்ரில்லர் திரைப்படத்திற்கு ‘யட்சிணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்டுள்ளது.

மர்மம், திகில் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், ஹாரர் த்ரில்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்குப் படங்களையும், இளைஞர்களைக் கவரும் கமர்ஷியல் திரைப்படங்களையும் வழங்கியவர் இயக்குநர் ஆர். கண்ணன்.

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’, ‘இவன் தந்திரன்’, ‘பிஸ்கோத்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இவர், இறுதியாக வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் மூலமும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றார்.

இந்த வரிசையில், தற்போது ஹன்ஷிகா மோத்வானியை முதன்மைப் பாத்திரத்தில் வைத்து ‘யட்சிணி’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணியாற்றும் இளம் பெண், பல காலங்களுக்கு முன்பு ஒரு மன்னனால் கட்டப்பட்ட கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார்.

அங்கு பொக்கிஷங்களைத் தேடும் முயற்சியில் அவர் எதிர்கொள்ளும் மர்மமான சம்பவங்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகின்றன.

திகில் மற்றும் பரபரப்பு நிறைந்த திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ஹன்ஷிகா மோத்வானி முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நரிக்குறவப் பெண் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

நரிக்குறவப் பெண்ணாக நடிப்பதற்காக அந்தச் சமூகத்தினருடன் பழகி, அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்து பயிற்சியும் எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்தப் படம் தனது நடிப்புப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் முக்கியமான காட்சிகளுக்காகச் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் ரூ.60 லட்சம் செலவில் பிரம்மாண்டமான மலைக் குகை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

1943-ஆம் ஆண்டில் நடைபெறும் பின்னணிக் காட்சிகள் இந்த அரங்கில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் ஒளிப்பதிவுக்கும் இசைக்கும் படக் குழு முக்கியத்துவம் அளித்துள்ளது.

ஹன்ஷிகா மோத்வானி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் மெட்ரோ ஷிரிஷ், தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸ்டண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மசாலா பிக்ஸ் (Masala Pix) நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர். கண்ணன் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.

கதையைத் தொல்காப்பியன் எழுதியுள்ளார். வசனங்களை ஸ்ரீனி எழுதியுள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். LV கணேஷ் முத்து இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை ஜிஜிந்த்ரா கவனிக்க, சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். பத்திரிக்கை தொடர்புப் பணிகளை ஜான்சன் மேற்கொள்கிறார்.

படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

டீசர் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாரர் த்ரில்லர் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்.

‘யட்சிணி’ திரைப்படத்தை E5 எண்டர்டெயின்மெண்ட்ஸ்
ஜெ.ஜெயகிருஷ்ணன் வரும் நவம்பர் மாதம் வெளியிடப் படக் குழு திட்டமிட்டுள்ளது.

🔱 Hansika Motwani in Dual Role and It’s a HORROR!

#Yakshini🌟
THE TITLE ITSELF IS GIVING CHILLS!Directed by R.kannan
A mysterious fort. Hidden treasures.Dark secrets.Unexpected twists.
November Release!

The film’s title was unveiled at Kerala’s renowned Chottanikkara Bhagavathy Temple; Hansika takes on dual roles for the first time in her career.*_

Director R. Kannan’s upcoming horror thriller, Yakshini, starring Hansika Motwani in the lead role, has been officially titled, with the announcement made at Kerala’s renowned Chottanikkara Bhagavathy Temple. The choice of venue holds special significance, as ‘Yakshini’ is another name associated with Chottanikkara Amma. It was for this reason that producer and director R. Kannan chose to unveil the title at the temple. Blending mystery, horror and unexpected twists, Yakshini has already sparked curiosity among fans of the genre, with the film scheduled for a November release.

R. Kannan has carved a distinct place for himself in Tamil cinema by delivering family entertainers and commercial films that appeal to younger audiences. His filmography includes Jayam Kondaan, Kanden Kadhalai, Settai, Ivan Thanthiran and Biskoth, among others. His most recent release, The Great Indian Kitchen, also drew attention from audiences and critics for its compelling story and presentation. Continuing his diverse filmmaking journey, he now joins hands with Hansika Motwani for Yakshini, a horror thriller built around an intriguing premise.

The story follows a young woman working as an officer in the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department who sets out to explore Gandharva Kottai, a fort built by a king many centuries ago. Her search for hidden treasures leads her into a series of mysterious incidents and unexpected twists that propel the narrative forward. With a screenplay driven by horror, suspense and mounting tension, the film promises an engaging experience for fans of the genre.

Adding another dimension to the project, Hansika Motwani appears in dual roles for the first time in her career, portraying both an HR&CE Department officer and a Narikuravar woman. To prepare for the latter role, the actress spent time with members of the community, familiarising herself with their way of life and undergoing training to portray the character authentically. The film is expected to mark a significant milestone in her acting journey.

For some of the film’s prominent sequences, a mammoth mountain-cave set was erected along Chennai’s East Coast Road at a cost of approximately ₹60 lakh. The set recreates the film’s 1943 period setting, with the relevant sequences shot against this specially constructed backdrop. The team has also placed considerable emphasis on the film’s cinematography and music to complement its atmospheric narrative.

Alongside Hansika Motwani, the film features Metro Shirish, Thalaivasal Vijay, Aadukalam Naren, Stunt Silva, Vinodhini, Pavan, Brigida Saga, Vadivel Murugan and Kalairani in prominent roles.

Produced and directed by R. Kannan under the Masala Pix banner, Yakshini has a story by Tholkappiyan and dialogues by Sreeni. Balasubramaniem handles the cinematography, while L.V. Ganesh Muthu has composed the music. Jijindra is responsible for editing, and Stunt Silva has choreographed the action sequences. Johnson handles PRO works.

With the entire shoot completed, the film is now in its final stages of post-production. Updates on the teaser and trailer are expected soon. E5 Entertainments, represented by J. Jayakrishnan, is planning to release Yakshini in November. With its supernatural premise, mysterious setting and suspense-filled narrative, the film aims to offer horror thriller enthusiasts a distinctive cinematic experience.

Our Score