‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கெடுத்ததால் சிகரெட்டுக்கு அடிமையான பெண் பிரபலம்..!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கெடுத்ததால் சிகரெட்டுக்கு அடிமையான பெண் பிரபலம்..!

பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போனதாலேயே அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு பெண் பிரபலம் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் நேற்று இது குறித்து எழுதியுள்ளார்.

“பிரபலமான அந்த திரைப்படக் கலைஞரான இளம்பெண்ணும் நானும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். ஓட்டலில் இருந்து அந்த நிகழ்ச்சி இடத்துக்குச் செல்லும் வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மற்றவர்கள் டீ குடிக்கச் சென்றார்கள்.

அவள் டீ குடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் கொஞ்சம் தயங்கியபடியே, “தயவுசெய்து தப்ப நெனச்சிக்காதிங்க.. நான் கொஞ்சம் அந்தப் பக்க்கம் போயி.. ” என்று கையில் இருந்த சிகரெட்டைக் காண்பித்துக் கெஞ்சுவது போல கண்ணாலேயே சைகை செய்தாள்.

நான் “ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல.. feel free” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

புகையாற்றி, கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்த அவள் “Soooooory..” என்று நெளிந்தாள்.

“எதுக்கு?” என்றேன்.

“உங்களுக்கு ஷாக்தானே?”

“Shock இல்ல.. bit surprised. Didn’t know that you smoke” என்றேன்.

“எல்லாம் இந்த Bigg Boss-னால வந்தது. அந்த வீட்டுக்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா?” என்றாள்.

“அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டேன்.

“ஆமா. அங்கருக்க டென்ஷன்.. பிரஷ்ஷருக்கு இது ஒண்ணுதான் outlet. பாக்கெட் பாக்கெட்டா கிடைக்கும்”

“இதுக்கு முன்னாடி நீ ஸ்மோக் பண்ணதுல்ல?”

“நோ.. நெவர்!.. அந்த inclination கூட கெடயாது. பாவம்.. எங்கம்மாவுக்குத் தெரியாது” என்றாள்.

அந்தப் பெண் யாராக இருக்கும் என்றெல்லாம் யோசிப்பதைவிட்டுவிட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியினால் என்ன கெட்டுரப் போகுது என்பவர்கள் இதைப் படித்தால் தேவலை..!

 
Our Score