full screen background image

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகையானார் கலா மாஸ்டர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகையானார் கலா மாஸ்டர்

தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவர் கலா மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் இதுவரையிலும் 700 திரைப்படங்களுக்கும் மேலாக நடன இயக்கம் செய்திருக்கிறார் கலா மாஸ்டர்.

இவர் தற்போது முதல்முறையாக நடிகையாக உருவெடுத்திருக்கிறார். இந்த வாய்ப்பை இவருக்கு வழங்கியிருப்பது இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இது பற்றி சமீபத்தில் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் பேசும்போது, “எனக்குத் தெரிஞ்சது டான்ஸ்தான். அதுனால அதை மட்டுமே செய்வோம்ன்னு நினைச்சுத்தான் இதுவரைக்கும் எனக்கு வந்த நடிப்பு சான்ஸையெல்லாம் வேண்டாம்ன்னு விட்டுட்டேன்.

“புன்னகை மன்னன்’ படத்துல கமல் ஸார்கூட ஒரு டான்ஸ் ஆடு”ன்னு கே.பி. ஸார் சொன்னார். அவருக்காக ஒரேயொரு பீட்ல மட்டும் கூட ஆடுனேன். மேற்கொண்டு நடிக்க மாட்டேன்னு அவர்கிட்டயே சொல்லிட்டேன்.

அடுத்து பி.சி. ஸ்ரீராம் ஸார் என்னைத் தேடி வந்து ஒரு முழுக் கதையையும் சொல்லி “இந்தப் படத்துல நீதான் நடிக்கணும்”ன்னு சொன்னார். அப்பவும் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் நிறைய பேர் கேட்டும் நான் மறுத்துட்டேன்.

ஆனால் இப்போ கடைசியா விக்னேஷ் சிவன்கிட்ட மாட்டிக்கிட்டேன். அது நயன்தாராவாலயா இல்லாட்டி விக்னேஷாலயான்னு எனக்கே தெரியலை. ஏன்னா, நயன்தாராவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ரொம்ப சின்சியரான பொண்ணு. காலைல 9 மணிக்கு ஷூட்டுன்னு 8.40 மணிக்கே வந்து உக்காந்திருவாங்க. அதே மாதிரி நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ற மனநிலையும் அவங்களுக்கு இருக்கு.

நான் நேரடியா நயன்தாராகூட வொர்க் பண்ணலை. பட் என் தங்கச்சி பிருந்தா பண்ணிருக்கா. அப்போ சில விழாக்கள்ல நயன்தாராவை பார்த்து பேசியிருக்கேன். அதுக்கப்புறம் எங்க வீட்டுக்குக்கு வந்தாங்க. அப்போதான் பழகவே ஆரம்பிச்சோம்.

திடீர்ன்னு ஒரு நாள் நயன்தாரா எனக்கு போன் செஞ்சு “விக்கி உங்ககிட்ட பேசணுமாம்”ன்னு பிட்டை போட்டாங்க. என்கிட்ட எதுக்கு விக்னேஷ் பேசணும்ன்னு யோசிச்சேன். அப்புறம் விக்னேஷே லைனுக்கு வந்து “இப்படியொரு கதை இருக்கு. இதுல நீங்கதான் நடிக்கணும்”ன்னு சொன்னாரு.

நான் ஒரு வாரம் டைம் கேட்டேன். அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன். எவ்ளோ நாள்தான் நாம ஓடிக்கிட்டேயிருக்கிறது. என்னைக்கோ ஒரு நாள் யார் படத்துலயாவது நடிச்சுத்தான் ஆகணும். அதை விக்கி படத்துலயே நடிச்சிரலாமேன்னு நினைச்சு இரண்டாவது நாளே விக்னேஷ் சிவனுக்கு போன் செஞ்சு “நான் நடிக்கிறேன்”னு சொல்லிட்டேன்.

நடிக்கும்போது எனக்கே என்னைப் பார்த்து சிரிப்பு தாங்கலை. ஆனாலும் நமக்கு இதுலேயும் ஒரு கவுரவம் கிடைக்குமேன்னு நினைச்சு பெருமிதப்பட்டேன்..” என்று சொல்லியிருக்கிறார்  கலா மாஸ்டர்.

 
Our Score