full screen background image

மார்ச் 29-ம் தேதி வெளியாகிறது ‘நேற்று இந்த நேரம்’ திரைப்படம்!..

மார்ச் 29-ம் தேதி வெளியாகிறது ‘நேற்று இந்த நேரம்’ திரைப்படம்!..

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் குமார் தயாரித்திருக்கும் கிரைம்-திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”.

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

என்.கெவின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தொகுப்பு பணிகளை கோவிந்த் மேற்கொண்டுள்ளனர். படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா, ரவி ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் கே.ஆர்.சாய் ரோஷன் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். K.R.சாய் ரோஷன் படத்தை இயக்கியுள்ளார்.

மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களும்தான் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை.

கிரைம் திரில்லர் பாணியில் சுவாரஸ்யமான திரைக்கதையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது.

தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

வரும் மார்ச் 29-ம் தேதி இந்தப் படத்தை உலகமெங்கும் திரையிட இருப்பதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Our Score