full screen background image

‘பிக்பாஸ்’ ஷாரிக்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நேற்று இந்த நேரம்’ திரைப்படம்!

‘பிக்பாஸ்’ ஷாரிக்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நேற்று இந்த நேரம்’ திரைப்படம்!

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் குமார் தயாரித்துள்ள திரைப்படம் நேற்று இந்த நேரம்’.

பிக் பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தொகுப்பு பணிகளை என்.கோவிந்த் மேற்கொண்டுள்ளனர். பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். கே.ஆர்.சாய் ரோஷன் இயக்கியுள்ளார்.

பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போக, அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களை கிரைம், திரில்லர் பாணியில் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது டிரைலரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது.

இப்படம் வரும் ஜனவரி 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Our Score