full screen background image

ஷாரூக்கானின் ‘டங்கி’ படத்தைக் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்..!

ஷாரூக்கானின் ‘டங்கி’ படத்தைக் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்..!

டிசம்பர் 21 தேதியான இன்று மிகுந்த ஆரவாரத்துடன் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படம் உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன், இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் இணைந்திருக்கும் முதல் திரைப்படம் இது.

இந்தியாவில் இதன் முதல் காட்சி இன்று அதிகாலை 5.55 மணிக்கு மும்பையின் அடையாளமாக திகழும் கெயிட்டி கேலக்ஸி திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை ரசிகர்கள் அவர்களுக்கே உரிய பாணியில் கொண்டாடி எல்லையற்ற மகிழ்ச்சியை உறுதிப்படுத்தினர்.

இது தொடர்பாக இணையத்தில் ஷாருக் கானின் ரசிகர்கள் ஏராளமான காணொளிகளை பகிர்ந்து வருகிறார்கள். அதில் மேளதாளத்துடனும், வான வேடிக்கைகளுடனும் பட வெளியீட்டை அவர்கள் கொண்டாடியதை காண முடிந்தது. மேலும் இந்த திரையரங்க வளாகத்தில் ஷாருக்கானின் பெரிய கட்அவுட் ஒன்றும் இருந்தது.

X‌ தளத்தில் ரசிகர்கள் பகிர்ந்துள்ள வீடியோக்களில் ஷாருக்கின் ரசிகர்கள் ஒன்றாக நடனம் ஆடி கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். மேள தாளத்தின் ஒலிக்கு ஏற்ப நடனமாடி தங்களின் மகிழ்ச்சியான மனநிலையையும் வெளிப்படுத்தினார்கள். சில ரசிகர்கள் டங்கி என எழுதப்பட்ட பதாகையை உயர்த்திப் பிடித்தி தங்களது ஆத்மார்த்தமான ரசிப்பினை காண்பித்துள்ளார்கள்.

இந்த வீடியோக்களுக்கு ஷாருக்கான் மகிழ்ச்சியுடன் பதிலளித்திருக்கிறார். படத்தின் வெளியீட்டிற்காக தயாராக இருந்த நடிகர் ஷாருக்கான்.. மும்பை கெயிட்டி கேலக்ஸியில் ரசிகர்களின் வீடியோக்களை தன்னுடைய இணைய பக்கத்தில் மறு பதிவு செய்து, ”நன்றி தோழர்களே மற்றும் தோழிகளே.. இது ஒரு நல்ல நிகழ்ச்சி மற்றும் #டங்கி மூலம் நீங்கள் அனைவரும் மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்” என பதிவிட்டிருக்கிறார்.  

நியூசிலாந்தில் உள்ள பார்வையாளர்கள் மட்டுமல்ல; மேலும். பலரும் இதற்கான எதிர்வினைகளை இணையத்தில் பகிர தொடங்கியுள்ளனர். படம் வெளியான தருணத்திலிருந்து சிறந்த விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

Our Score