full screen background image

சீனு ராமசாமி இயக்கும் புதிய திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’

சீனு ராமசாமி இயக்கும் புதிய திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’

‘ஜோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘VISION CINEMA HOUSE’  டாக்டர் டி.அருளானந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் ஏகன். மேலும் பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா (அறிமுகம்), லியோ சிவகுமார், திருச்செந்தூர் ஶ்ரீராம்(அறிமுகம்), சத்யா(அறிமுகம்), மானஸ்வி, பவா செல்லதுரை மற்றும் பலர் நடிக்கின்றனர்.

எழுத்து இயக்கம் – சீனு ராமசாமி, தயாரிப்பு – டாக்டர் டி. அருளானந்து, மேத்யூ அருளானந்து, இசை – N.R. ரகுநந்தன் ஒளிப்பதிவு – அசோக்ராஜ், வசனம் – பிரபாகர், சீனு ராமசாமி, படத் தொகுப்பு – ஶ்ரீகர் பிரசாத், கலை இயக்குநர் – R.சரவண அபிராமன், ஆடை வடிவமைப்பு – v.மூர்த்தி, நடனம் – நோபல், சண்டை பயிற்சி இயக்கம் – ஸ்டன்னர் ஷாம், பாடல்கள் – வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதேசி, நிர்வாக தயாரிப்பு – வீர சங்கர், டிசைனர் – சிந்து கிராஃபிக்ஸ் பவன் குமார், பத்திரிகை தொடர்பு – நிகில் முருகன், ஒப்பனை – A.பிச்சுமணி, புகைப்படங்கள் – மஞ்சு ஆதித்யா.

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘மாமனிதன்’ போன்ற வெற்றி மற்றும் விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி, இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

இத்திரைப்படம் கிராமத்து மண் சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல், காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகும் வாழ்வியல் திரைப்படமாகும்.

தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது

Our Score