தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கையான சம்யுக்தா விஜயன் நீல நிறச் சூரியன் என்ற படத்தில் தானே நடித்து, இயக்கியிருக்கிறார்.
பர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன் சார்பில் மாலா மணியன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் சம்யுக்தா விஜயன், கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்டீவ் பெஞ்சமின் இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகிய மூன்று பொறுப்புகளையும் மிகச் சிறப்பான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் திரைப்படம் என்பதுதான்.
அது மட்டுமில்லாமல், IFFI-23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, உலக சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் நல்ல சினிமாக்களை விரும்பும் அனைவரும் பாராட்டிய படமாகவும் இது உருவாகி இருக்கிறது.. இப்படத்தின் சிறப்பு காட்சிகளில் கலந்து கொண்ட திரைப் பிரபலங்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது.
“ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களைப் பார்க்கிறது?.. எப்படி அதை கடந்து இவர்கள் சாதிக்கிறார்கள் என்பதை எந்தவிதமான நாடகத் தன்மையும் இல்லாமல் இந்தப் படத்தில் கொடுத்துள்ளேன்” என்கிறார் திருநங்கை சம்யுக்தா விஜயன்.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் 4-ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது.
Our Score