full screen background image

பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார் பினு டி.ஜான்போஸ்கோ

பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார் பினு டி.ஜான்போஸ்கோ

கல்வியும், கலையும் இணைந்து சிறப்பாக வளர முடியும் என்பதை நிரூபிக்கும்விதமாக, இளம் நடிகர் பினு டி. ஜான் போஸ்கோ தனது பத்தாம் வகுப்பு தேர்வில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ திரைப்படத்தில் ‘சர்வேஷ்’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பிற்கு சிறப்பான மதிப்பெண்களுடன் முன்னேறியுள்ளார்.

கல்வியிலும், கலைத் துறையிலும் சமநிலையுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையுடன் இவருக்கு உள்ள உறவும் குறிப்பிடத்தக்கது.

‘சுந்தர பாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ உள்ளிட்ட படங்களிலும், ஜி5 நிறுவனம் தயாரிக்கும் இணையத் தொடர்களிலும் படத் தொகுப்பாளராக பணியாற்றிய பிஜு V டான் போஸ்கோவின் மகனான இவர், தந்தையின் பாதையைத் தொடர்ந்து கலைத்துறையில் தன்னுடைய இடத்தை உருவாக்கி வருகிறார்.

இளம் வயதிலேயே இப்படியான சாதனையைப் படைத்துள்ள பினுவுக்கு, இயக்குநர்கள் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ரமேஷ் கண்ணா, எஸ்.ஆர். பிரபாகரன், யூகி சேது உள்ளிட்டோர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

அதோடு இசைக் கலைஞர்கள் ட்ரம்ஸ் சிவமணி, ஸ்ரீகாந்த் தேவா மற்றும் நடிகர்கள் வடிவேல் முருகன், ஜாக்குவார் தங்கம் போன்ற பலரும் இவரை வாழ்த்தி ஊக்கமளித்துள்ளனர்.

படிப்பையும், நடிப்பையும் சமமாக முன்னெடுத்து வரும் பினு டி. ஜான் போஸ்கோ, எதிர்காலத்தில் திரையுலகில் முக்கியமான இடத்தைப் பிடிப்பார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

Our Score