சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T.ரித்தீஷ் குமார் தயாரிக்கும் புதிய படம் ‘நான் அவளை சந்தித்தபோது.’
இந்த படத்தின் நாயகனாக ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த சந்தோஷ் நடிக்கிறார்.
கதாநாயகியாக ‘சித்து+2’, ‘வில் அம்பு’, ‘நையப்புடை’ படத்தில் நடித்த சாந்தினி நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
‘மாசாணி’, ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிச்சந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
Our Score









