போரஸ் சினிமாஸ் மற்றும் ஸ்ரீநிதி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘மை டியர் லிசா.’
கதையின் நாயகனாக நடிகர் விஜய் வசந்த் நடிக்க. அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதைத் தவிர இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுவாமிநாதன், மயில்சாமி, பர்னிகா சந்தோக் இவர்களுடன் விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற நட்சத்திரப் பட்டாளமும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளது.
கன்னட திரைப்படத்தின் முன்னணி ஒளிப்பதிவாளரான சபாகுமார் ஒளிப்பதிவு செய்ய, விளம்பர படத் தொகுப்பாளர் G.ராமராவ் படத் தொகுப்பு செய்ய, மக்கள் தொடர்பு பணியை செல்வரகு கவனிக்கிறார். இத்திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை ModTech Mediaa என்னும் நிறுவனம் செய்ய உள்ளது. ரஞ்சன் கிருஷ்ணதேவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் துவக்க விழாவில் திரைத்துறையின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தயாரிப்பாளர் ரமேஷ்ரெட்டி, நடிகர் விஜய் வசந்த், இயக்குநர் பி.வாசு, இயக்குநர் ரஞ்சன் கிருஷ்ணதேவன், தயாரிப்பாளர் பிரேம் கல்லாட், போரஸ் சினிமாஸ் தயாரிப்பாளர் செல்வா பாக்கியராஜ், ஒயிட்ரோஸ் குழும தொழிலதிபர் தனபால் உடையார் ஆகியோர் படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் படமாக்கப்படும் இத்திரைப்படம் திகில் படங்களின் வரிசையில் மற்றுமொரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் படப்பிடிப்பை துவங்கியுள்ள இத்திரைப்படம் சென்னை, கோவா மற்றும் கேரளாவின் முக்கிய நகரங்களில் படமாக்கப்படவுள்ளது.
இத்திரைப்படம் வருகிற் ஜுலை மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.