full screen background image

‘கோ-2’ பாடல்கள் வெற்றி – இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸின் பெருமிதம்..!

‘கோ-2’ பாடல்கள் வெற்றி – இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸின் பெருமிதம்..!

சினிமா, வெவ்வேறு அங்கங்களை கொண்டிருந்தாலும் அதன் இதயமாக செயல்படுவது இசைதான். அப்படிபட்ட அந்த இசையை தனது குழந்தை பருவத்தில் இருந்தே கற்று கொண்டு தற்போது வெற்றிகரமான இசையமைப்பாளராக வளர்ந்திருக்கிறார் லியான் ஜேம்ஸ்.

இவரின் தந்தை நோயல் ஜேம்ஸ், இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மானிடம் பல வருடங்களாக பணியாற்றியது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. அதனால்தான் என்னவோ மிக இளம் வயதிலேயே இசையமைக்க தொடங்கிவிட்டார்.

ராகவா லாரன்சின் ‘காஞ்சனா-2’ படம் மூலம் அறிமுகமாகி, ‘வாயா வீரா’ பாடல் வழியாக மக்களை ஈர்த்த இவர் கீபோர்டிலும், கிட்டாரிலும் கை தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இசை அமைத்திருக்கும் ‘கோ-2’-வின் பாடல்கள் ரேடியோவில் சக்கைப்போடு போட்டு கொண்டிருக்கிறது.

“2009-ம் ஆண்டில் இருந்தே நான் இசைத் துறையில் பணியாற்றினாலும், ஒரு முழு திரைப்படத்திற்கு இசையமைத்தது முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் என்னிடம் ‘கோ-2’ ஒரு பொலிடிக்கல் திரில்லர் என்று சொன்னதுமே கண்ணை மூடி கொண்டு சரியென்று சொல்லிவிட்டேன்.

இம்மாதிரியான வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்திற்கு இசையமைப்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால்தான், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இப்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது iTunes-ல், படத்தின் பாடல்கள் அனைத்தும் டாப் வரிசையில் இருப்பது உண்மையாகவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

மேலும் புதுமையான இசை கருவிகளையும் புது குரலையும்  அறிமுகப்படுத்த வேண்டும் என்ற என் கற்பனைகளுக்கு உயிர் கொடுத்தது ‘கோ-2’ திரைப்படம்தான்.

‘கோ-2’ திரைப்படத்திற்காக நானும், என்னுடைய பிரம்மாண்டமான லைவ் ஸ்ட்ரிங் இசை குழுவினரும், இரவு பகலாக கண்விழித்து உழைத்ததின் பலனை இப்போது நான் அனுபவிக்கிறேன். கண்டிப்பாக ‘கோ-2’ படம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும்…!” என்கிறார் இளம் இசை அமைப்பாளர் லியான்  ஜேம்ஸ்.

Our Score