விக்ரம் வேதா திரைப்படம் வெற்றிகரமாக தொடர்ச்சியாக ஓடி 100 நாட்களைக் கடந்துள்ளதை அடுத்து அத்திரைப்படத்தின் 100-வது நாள் விழாவை வெற்றி விழாவாகக் கொண்டாடியது படக் குழு.
இந்த விழா நேற்று இரவு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி, நடிகர்கள் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீதர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவில் படத்தில் பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டது.
Our Score