full screen background image

“நான் தல அஜித்தின் தீவிர ரசிகன்..” – ‘அர்த்தநாரி’ ஹீரோ ராம்குமாரின் பெருமிதம்..!

“நான் தல அஜித்தின் தீவிர ரசிகன்..” – ‘அர்த்தநாரி’ ஹீரோ ராம்குமாரின் பெருமிதம்..!

தனது ‘அர்த்தநாரி’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார் வசீகரமான இளைஞரான ராம்குமார். சராசரி இளைஞனை போல இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் ராம்குமார்.  எனினும், நடிப்பின் மேல் இவர் கொண்ட காதல், இவரை சில விளம்பர படங்களில் நடிக்க வைத்தது.

“நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அந்த வேலையில் நான் முழு மன திருப்தி அடையவில்லை. எனக்குள் இருந்த அந்த ஒரே தேடல் நடிப்பை நோக்கி பயணித்ததுதான். அப்போதுதான் சில விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினேன். அப்படி நான் நடித்து, திரை அரங்கங்களில் திரையிடப்பட்ட ஓர் விளம்பர படம் மூலமாகத்தான் எனக்கு இந்த ‘அர்த்தநாரி’  படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது…” என்கிறார் ஸ்மார்ட்டான ராம்குமார்.

பாலாவிடம் இணை இயுக்குநராகப் பணிபுரிந்த சுந்தர இளங்கோவன் இந்த திரைப்படத்தை இயக்க, ‘வெண்ணிலா கபடி குழு’ புகழ் செல்வகணேஷ் இசை அமைத்துள்ளார். மேலும், ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் கதாநாயகி அருந்ததி, நாசர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்க்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தை பற்றி ராம் கூறுகையில், “அர்த்தநாரி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு இந்த படத்தின் கதையும் கண்டிப்பாக வலிமை உள்ளதாக இருக்கும். என் முதல் படத்திலேயே அனுபவமிக்க நாசர் சாருடன் இணைந்து நடித்ததில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.

‘நான் கடவுள்’  ராஜேந்திரன் உண்மையாகவே ஓர் எளிமையான மனிதர்; படப்பிடிப்பில் அவருடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. என்னுடன் இணைந்து நடிக்கும் அருந்ததி தங்களின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது…” என்கிறார்.

மேலும் தல அஜித்தின் தீவர ரசிகரான இவர், “நான் ‘தலை’யின் உண்மையான விசுவாசி, வெறி பிடித்த ரசிகன் என்று சொல்லி கொண்டே போகலாம். எந்தவித பின்பலமுமின்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அவரைத்தான் என்னுடைய முன் மாதிரியாக பார்க்கிறேன்…!” என்று பெருமிதப்படுகிறார் ராம்குமார்.

Our Score