சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் படம் ‘அந்தமான்’.
கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளு சபா மனோகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கானா பாலா ஒரு பாடலைப் பாடி நடிக்கிறார்.
கதை, வசனம், பாடல்களை டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதுகிறார். எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இப்படத்தை இயக்குகிறார். எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையமைக்க, ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். கூல் ஜெயந்த் நடனம் அமைக்க, ஜி.ஆர்.அனில் மல்நாட் எடிட்டிங் செய்கிறார். பி.கே.பிரபு சண்டைப் பயிற்சி அளிக்க, சுந்தர்ராஜன் கலையை நிர்மாணிக்கிறார்.
பூமித்தாயை நேசிக்கும் ஒரு புதல்வன் படும்பாட்டையும், தேசத்தைக் காப்பற்ற சேதம் விளைவிப்போரை சூறையாடுவதையும் களமாகக் கொண்ட இந்தக் கதை முன்பகுதி தமிழகத்திலும், பின்பகுதி அந்தமானிலும் படமாகிறது. அந்தமானைச் சேர்ந்த ஏ.கண்ணதாசன் இப்படத்தை இயற்கை எழில் கொஞ்சும் அந்தமானின் முக்கிய பகுதிகளில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் ஏவி.எம். ஸ்டுடியோவில் நேற்று காலை நடைபெற்றது. இதில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ஸ்டண்ட் மாஸ்டரும், கில்ட் அமைப்பின் செயலாளருமான ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், நடிகர்கள் சரவணன், மன்சூர் அலிகான் மற்றும் ‘அந்தமான்’ படத்தின் நாயகன் ரிச்சர்ட், நாயகி மனோசித்ரா, தயாரிப்பாளர் ஏ.கண்ணதாசன், இயக்குநர் ஆதவன் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.