நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறாராம்..!

நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறாராம்..!

“வர மாட்டேன்..” “நடிக்க மாட்டேன்..” “ஹீரோவாக மட்டும் நடிக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்யாத குறையாக ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும் சொல்லிக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் சூரியும், இப்போது கதாநாயகனாக களத்தில் இறங்குகிறார்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’, ’நீதானே என் பொன்வசந்தம்’, ‘யாமிருக்க பயமேன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த R.S. Infotainment நிறுவனத்தின் தயாரிப்பாளரான எல்ரெட் குமார், இந்தப் படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.

இந்தப் படத்தை பிரபல இயக்குநர் வெற்றி மாறன் இயக்கவுள்ளாராம்.

இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டு வருவதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

இன்னமும் பெயர் சூட்டப்படாத இத்திரைப்படம் குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

படத்தின் இயக்குநரான வெற்றி மாறனுக்கும், நகைச்சுவைக்கும் ரொம்ப தூரமாச்சே என்பதால், தமிழ்த் திரையுலகமே இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு திகைத்துப் போய் நிற்கிறது..!

வடிவேலு, விவேக், கருணாஸ், சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு வரிசையில் கடைசியாக நல்லாயிருந்த சூரியையும் இறக்கி விட்டுட்டாங்க..!

இனி என்னாகுமோ..?

Our Score