ஆக்சன் குயினாக கார்த்திகா நாயர்..!

ஆக்சன் குயினாக கார்த்திகா நாயர்..!

அவங்க அம்மாவை போல டாப் கியரில் ஏறப் போகிறார் என்று பார்த்தால் முன்னாள் ஹீரோயின் ராதாவின் மகள் கார்த்திகா நாயரின் நிலைமை தலைகீழாகத்தான் இருக்கிறது..! அவரது நெடிதுயர்ந்த உயரம், இன்றைய தமிழ் ஹீரோக்களுக்கு தோதுபடவில்லை போலும்..!

‘கோ’ படத்தின் மூலமாக பெரிய ஹிட்டடித்தாலும், அடுத்தடுத்து படங்கள் அமையாததை கமிஷன் வைத்து விசாரித்தாலும் கண்டறிய முடியாது. ஆனாலும் ஒரு நல்ல இயக்குநரின் இயக்கத்தில் நடித்தால் இதைவிட பெரிய பெயர் கிடைக்குமென்று நினைத்து ‘அன்னக்கொடி’யில் நடித்தார். அவரது பரந்த முதுகை பார்த்த திருப்தி மட்டுமே ரசிகர்களுக்கு..! இந்தத் தோல்வியினால் இன்னொரு முறை அவார்டு பட இயக்குநர்களை திரும்பி பார்ப்பாரா என்று நினைத்தால் இப்போது இயக்குநர்எஸ்.பி.ஜனநாதனை வாழ்த்தோ வாழ்த்தென்று வாழ்த்தியிருக்கிறார் கார்த்திகா..

ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஷாம் இவர்களோடு நடித்து வரும் ‘புறம்போக்கு’ படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இப்போது குலுமனாலியில் குளுகுளு ஷூட்டிங்கை முடித்துவிட்டு, ராஜஸ்தானின் வெப்பக்காடான ஜோத்பூருக்கு பேக்கப் ஆகியிருக்கிறார்களாம்..

இந்தப் படம் பற்றிச் சொல்லும் கார்த்திகா,  குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக கடந்தது. மறக்க முடியாததாக இருந்தது. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் கரடு முரடானது. ஆக்சன்  காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் வீடியோ கேம் மூலம் பிரசித்தி பெற்ற வீராங்கனையான லாரா க்ராப்ட் போல இருக்கும் . இதைத் தவிர நான் ஆடியிருக்கும் டேப் டான்ஸும் எனக்கு பெயர் கொடுக்கும்னு நம்புறேன். இயக்குனர் ஜனநாதன் ஒரு சரித்திர பேராசிரியர் மாதிரியிருக்கார். அவரது உலக அறிவு ஆச்சரியமானது. அவ்ளோ விஷயம் பேசுறாரு..”  என்று சொல்லிக் கொண்டே போகிறார்..! 

தமிழ்த் திரையுலகின் ஒரேயொரு கம்யூனிஸ்ட் இயக்குநரான எஸ்.பி.ஜனநாதனின் புகழ் ஹீரோயின்கள் மூலம்தான் வெளி வருகிறது போலும்.. படத்தின் ஹீரோக்கள் 2 பேரும் மூச்சு விட மாட்டேன்றாங்களே..!!?

Our Score



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *