தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, சர்வதேச எம்மி விருது (International Emmy Awards) மேடையில் விருது வழங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வரலாற்று சாதனையை படைக்கவுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நவம்பர் 23 அன்று நடைபெறவுள்ள 54-வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில், வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கும் முக்கிய திரையுலக நபர்களில் ஒருவராக விஜய் சேதுபதி பங்கேற்கிறார்.
சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமி (IATAS) வழங்கும் இந்த மதிப்புமிக்க சர்வதேச எம்மி விருது மேடையில் ஒரு இந்திய ஆண் நடிகர் விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு, 2016-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ‘பிரைம்டைம் எம்மி விருது’ விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா விருது வழங்கியிருந்தார்.
பின்னர், 2024ம் ஆண்டு சர்வதேச எம்மி விருது விழாவை நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் தொகுத்து வழங்கினார். அந்த வகையில், தற்போது விஜய் சேதுபதிக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு உலக அரங்கில் கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.









