இப்போது கோடம்பாக்கம் இருக்கின்ற நிலையில் ஒரு சினிமா எடுப்பதே சிக்கலானது.. இந்த நிலைமையில் தொடர்ச்சியாக 5 படங்களை எடுத்தால் தயாரிப்பாளருக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும்..?
எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் துவார் ஜி. சந்திரசேகர்தான் அந்த தைரியத் தயாரிப்பாளர். ‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘பார்க்கணும் போல இருக்கு’ ‘இருவர் உள்ளம்’ படத்திற்கு பிறகு 5-வதாக அவர் தயாரித்திருக்கும் படம்தான் இந்தத் ‘தொட்டால் தொடரும்’.
கேபிள் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் தமன் ஹீரோவா நடிச்சிருக்காரு அருந்ததி ஹீரோயின்.வின்சென்ட் அசோகன்,ஹலோ எப்.எம். பாலாஜி, அம்மு, ரஞ்சன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- விஜய் ஆம்ஸ்ட்ராங். இசை -பி.சி சிவன்.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சந்திரசேகர், சிங்கப்பூரில் பெரும் தொழிலதிபராக இருப்பவர். தமிழ்த் திரைப்படங்களை சிங்கப்பூர், மலேசியாவில் விநியோகம் செய்யும் வேலையையும் செய்து வருகிறார். அங்கே சம்பாதித்த பணத்தை இங்கே கோடம்பாக்கத்திற்கு கொண்டு வந்து கொட்டுகிறாராம்.
சமீபத்தில் நடந்த ‘தொட்டால் தொடரும்’ படத்தின் பிரஸ் மீட்டில், “இதுவரைக்கும் அஞ்சு படங்களை தயாரிச்சிருக்கேன். இதைத் தொடர்ந்து செய்து ஏவி.எம். நிறுவனம் போல ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனமா வரணும்ன்றதுதான் எனது லட்சியம்” என்றார் தயாரிப்பாளர் சந்திரசேகர். கடைசியாக அவர் சொன்னது வந்திருந்த பத்திரிகையாளர்களையும் கொஞ்சம் கைதட்ட வைத்தது.”வரும்காலத்தில் தகுதியான, திறமையுள்ள பத்திரிகையாளர்களையும் இயக்குநர்களாக அறிமுகம் செய்வேன்‘‘ என்றார் தயாரிப்பாளர் சந்திரசேகர்.
வாங்கோ ஸார்.. வாங்க.. வெறுமனே கை தட்டலுக்காக என்றில்லாமல் சீக்கிரமா ஒரு பத்திரிகையாளரை களத்துல இறக்குங்க.. கோடம்பாக்கத்துல கண்டிப்பா உங்களுக்கொரு ஒரு சிலை உறுதி..!