மித்ராஸ் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.வீரவிஸ்வாமித்திரன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “கலர் கண்ணாடிகள்” இந்த படத்தில் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக திவ்யா ஸ்ரீதரன் அறிமுகமாகிறார். மற்றும் கோவைபாபு, சௌந்தர்ராஜன், பிளாக்பாண்டி, கொட்டாச்சி, வைஷாலி, பானுமதி, புருஷோத்தமன், குணா ஆகியோருடன் திருநங்கை ஜோதி இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – மகிபாலன்
இசை – இனியவன்
பாடல்கள் – இளையகம்பன்
எடிட்டிங் – ஆர்.ஜி.ஆனந்த்
நடனம் – ராம்சிவா
ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா
தயாரிப்பு நிர்வாகம் – ஆறுமுகம்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ர.ராகுல்
தயாரிப்பு – பி.வீரவிஸ்வாமித்திரன்
“நான் வண்ணத்திரை, சின்னத்திரையில் நடித்து பெற்ற அனுபவமே என்னை இயக்குனராக மாற்றியது. என் மேல் நம்பிக்கை வைத்து என்னை இயக்குனராக மாற்றிய தயாரிப்பாளர் வீரவிஸ்வாமித்திரன் கடவுள் மாதிரி. இந்த படத்தோட ஹீரோ ரொம்ப அதிர்ஷ்டசாலி. ஹீரோ கிடைக்காமல் படப்பிடிப்பை துவங்கினோம்… ஒரு நாள் எங்களது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர், ரொம்ப லட்சணமாக இருந்தார். அவரை நடிக்கக் கேட்டோம். ‘ஓ.கே.’ என்றார். இரண்டே நாட்களில் ஹீரோவாகி விட்டார். இந்தப் படத்தில் உள்ள மூன்று பாடல்களான ‘வாடா டேய் பங்காளி, வாழ்வை கொண்டாடு’, ‘ஆசைத் திருடா ஆசைத் திருடா’, ‘அக்டோபர் பூங்காற்று ஹார்ட்டுல மெல்ல பட்டுச்சி’ போன்ற பாடல்களை முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கினோம். நல்ல கமர்ஷியல் படமாக “கலர் கண்ணாடிகள் உருவாகி வருகிறது…” என்றார் கே.ர.ராகுல்.