full screen background image

ஹீரோக்களுக்கு சம்பளத்தை அளவுக்கதிகமாக உயர்த்திக் கொடுக்காதீர்கள் – நடிகர் கருணாஸ் பேச்சு

ஹீரோக்களுக்கு சம்பளத்தை அளவுக்கதிகமாக உயர்த்திக் கொடுக்காதீர்கள் – நடிகர் கருணாஸ் பேச்சு

இருக்குற மார்க்கெட்டுக்கு ஏத்தாப்புலதான் சம்பளம் வாங்குறோம்னு நடிகர், நடிகைகள் சொன்னாலும், ஒரு சிலரைத் தவிர மற்றவர்களெல்லாம் தங்களுடைய கால்ஷீட்டை ஏலத்தில்தான் விடுகிறார்கள். யார் அதிக சம்பளம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே கால்ஷீட் என்று சொல்லி்ததான் பட வாய்ப்பை பெறுகிறார்கள்.

இதனால் என்ன ஆகிறது என்றால், அதே நடிகரை வேறொரு படத்தில் புக் செய்யப் போனால் போன வாரம்தான் அந்த கம்பெனி இவ்வளவு சம்பளம் கொடுத்துச்சு. அதுனால நீங்க அதைவிட அதிகமா கொடுங்க என்று தைரியமாகக் கேட்கிறார்கள் நடிகர்கள். கடைசியில் படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய நஷ்டமாகி அவர் அடுத்த படம் எடுக்காமல் விலகி ஓடுகிறார். இதனாலேயே புதிய தயாரிப்பாளர்கள் தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைக்காமல் இருக்கிறார்கள்.

இன்று மாலை நடைபெற்ற கலர் கண்ணாடிகள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது பற்றி பேசிய நடிகர் கருணாஸ், “சில தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு அளவுக்கதிகமாக சம்பளத்தை ஏற்றிக் கொடுப்பதினால் அந்தத் தயாரிப்பாளரும், வேறு சில தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தேவையே இல்லாமல், தகுதியே இல்லாத நடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்படி சம்பள்த்தை உயர்த்திக் கொடுப்பதை தயாரிப்பாளர்கள் நிறுத்தினால்தான் தமிழ்ச் சினிமா முன்னேறும்..” என்றார்.

அண்ணாத்த சொல்றதும் சரிதான்..! தயாரிப்பாளர்கள் யோசித்தால் அவர்களுக்கும் நல்லது..! சினிமாத் துறைக்கும் நல்லது..!

Our Score