‘இளைய திலகம்’ பிரபு நடித்த ‘வேலை கிடைச்சுருச்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமான நடிகர்ம ன்சூர் அலிகான். ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார்.
அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன், ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.
தற்போது அவரது ராஜ் கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக ‘கடமான் பாறை’ என்ற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, இயக்கியும் வருகிறார்.
இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனு ராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்.
மற்றும் சிவசங்கர், சார்மிளா, கனல் கண்ணன், முல்லை, கோதண்டம், ‘கலக்கப் போவது யாரு’ பழனி, பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
நடிகர் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – மகேஷ்.T, இசை – ரவிவர்மா, பாடல்கள் – சொற்கோ, ரவிவர்மா, மன்சூரலிகான், கலை இயக்கம்- ஜெயக்குமார், நடனம் – சந்துரு, சிவா, ஜெயா, சம்பத்ராஜ், சண்டை பயிற்சி – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – ஜெ.அன்வர், ஆக்கம், இயக்கம் – மன்சூரலிகான்.
படம் பற்றி இயக்குநர் மன்சூரலிகான் பேசியபோது, “நகைச்சுவை கலைந்த திரில்லர் படமாக இந்த ‘கடமான் பாறை’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்போதெல்லாம் கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. செல்போன், மார்டன் டெக்னாலஜி அவர்களை தவறான வழிக்கு கொண்டு போகிறது.
அப்படி தவறான வழியில் போகும் இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு எப்படி மாறுகிறது என்பதே இந்தப் படத்தின் கரு.
படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தின் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
இந்தப் படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல்களுக்கு நடனமாட நாயகன் அலிகான் துக்ளக்கிற்கு இணையான இன்னொரு நாயகியை தேடிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அந்தப் பாடல்களுக்காண படப்பிடிப்பு நடைபெறும்…” என்றார் மன்சூரலிகான்.









