full screen background image

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

ஸ்ரீவாரி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரித்துள்ள புதிய படம் ‘காதலே காதலே’.

இந்தப் படத்தில் மஹத் ராகவேந்திரா மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ஸ்ரீஜா ரவி, விடிவி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் அய்யப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர். 

‘சீதா ராமம்’ படப்புகழ் விஷால் சந்திரசேகர் படத்திற்கு இசையமைக்கிறார். சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.எஸ். சாகு தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துக் கொள்கிறார். தியாகு படத் தொகுப்பு செய்துள்ளார்.

ஆர். பிரேம்நாத் இயக்கியுள்ள இந்தப் படம் சரியாகத் திட்டமிட்டு, படக் குழு அதை செயல்படுத்தி வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்துள்ளது.

தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் இது குறித்து பேசும்போது, “ஒரு தயாரிப்பாளரின் வெற்றி என்பது சரியான குழு மற்றும் திட்டமிடல் மூலம் முழுமையடைகிறது என்று நம்புகிறேன். ‘காதலே காதலே’ படத்தின் மொத்தக் குழுவினரும், ப்ரீ புரொடக்‌ஷன் கட்டத்தில் திட்டமிட்டபடி, ஒரே ஸ்ட்ரெச் ஷெட்யூலில் படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளராக என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

ஒரு இயக்குநரின் திறமை சிறந்த படத்தை உருவாக்குவது மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் அனைத்தையும் திறமையாக நிர்வகிப்பது மற்றும் திட்டமிட்டபடி அனைத்தையும் முழுமையாக செய்வதும்தான். இயக்குநர் பிரேம்நாத் இந்தத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மஹத் ராகவேந்திரா திறமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. மீனாட்சி கோவிந்தராஜன் இண்டஸ்ட்ரிக்கு கிடைத்த வரப்பிரசாதம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விரைவில் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதியை அறிவிப்போம்..” என்றார்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘ஜோ’  மற்றும் நம் இதயங்களை வென்ற மற்ற காதல் எண்டர்டெயினர் படங்களைப் போலவே, உங்கள் மனதைக் கவரும் மகிழ்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படமாக இந்தக் ‘காதலே காதலே’ திரைப்படம் இருக்கும்.

‘காதலே காதலே’ திரைப்படத்தின் மேஜிக்கல் அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.

Our Score