‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை-3’, ‘டெடி’, ‘பகீரா’ மற்றும் பிற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நடிகை சாக்சி அகர்வால், மிகக் குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார்.
உடற் தகுதி, ஃபேஷன் மற்றும் பயணம் போன்றவை மீதான அவரது ஈடுபாடுதான் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.
2024-ம் வருடத்தின் மகளிர் தினத்தை முன்னிட்டு, நடிகை சாக்ஷி அகர்வால் சமீபத்தில் பெண் பத்திரிக்கையாளர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
அந்த சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளர்கள் தங்களின் வெற்றிக் கதைகளையும், வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை எப்படி தாண்டி வந்தோம் என்பதையும் சாக்சி அகர்வாலிடம் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் அங்கேயிருந்த உள்ளரங்க விளையாட்டு போட்டிகளில் விளையாடி மகிழ்ந்தனர். உடற் பயிற்சிகளையும் செய்து பழகினர். அத்துடன், சுவாரஸ்யமான உரையாடல்களையும் மேற்கொண்டனர்.
தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சுவாரசியமான திரைப்படங்களை தன் கைவசம் வைத்திருக்கும் நடிகை சாக்சி அகர்வால். இதற்காக களரி, சண்டை பயிற்சி மற்றும் அனைத்து வகையான நடனங்களின் பட்டறைகள் மற்றும் பயிற்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.













