ஹிந்தி நடிகர்-இயக்குநர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது..!

ஹிந்தி நடிகர்-இயக்குநர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது..!

இந்தியாவில் திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே விருது’ இந்தாண்டு பிரபல இந்தி நடிகர் சசி கபூருக்கு வழங்கப்பட்டுள்ளது.

sasikapoor-1

பழம்பெரும் நடிகர் பிரிதிவிராஜ் கபூரின் மகனான சசிகபூர், ஏராளமான இந்தி படங்களில் கதாநாயகனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்ததுடன், சில படங்களை தயாரித்து, இயக்கியும் உள்ளார். மேலும் சில ஆங்கிலப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்த ஆரம்பக் கால படங்களில் அவருக்கு நண்பராகவும், சகோதரராகவும் சசிகபூர் நடித்துள்ளார். எளிமையான இவரது வசன உச்சரிப்பு, குறும்புத்தனமான இவரது காதல் சேட்டை, சண்டை காட்சிகளில் இவர் வெளிப்படுத்தும் ஆக்ரோஷமான முகபாவம் போன்றவை ஏராளமான ரசிகர் பட்டாளத்தை இவருக்கு ஏற்படுத்தி தந்தது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பிலிம்பேர் விருது, மத்திய அரசின் பத்மபூஷன் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள இவரை 2014-ம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

கபூர் குடும்பத்திலிருந்து தாதா சாகேப் பால்கே விருது பெறும் மூன்றாவது நபர் இவராவார். இவரது தந்தை பிருத்விராஜ் கபூரும், சகோதர்ரான ராஜ்கபூரும் ஏற்கெனவே தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score