“என்னைவிட ரஜினி ஈஸியா நடிச்சுப் பேர் வாங்கிர்றாரு..” – கமல்ஹாசனின் பாராட்டு..!

“என்னைவிட ரஜினி ஈஸியா நடிச்சுப் பேர் வாங்கிர்றாரு..” – கமல்ஹாசனின் பாராட்டு..!

சமீபத்தில் தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்திற்கு இந்தியத் திரையுலகத்தின் மிக உயர்ந்த விருதான ‘தாதா சாஹேப் பால்கே’ விருது வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இதற்காக நடிகர் கமல்ஹாசன் ரஜினியை வாழ்த்தி டிவீட்டரில் செய்தியை வெளியிட்டிருந்தார். அந்தச் செய்தியில் “திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100 சதவிகிதம் பொருத்தம்…” என்று கமல்ஹாசன் சொல்லியிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

இது “ரஜினி திரைப்படங்களில் நடிக்கவில்லை. சும்மாவே கேமிரா முன்பாக வந்து நிற்பதாக கமல்ஹாசன் குத்திக் காட்டுவதைப் போல இருக்கிறது…” என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

இது குறித்து ஒரு பேட்டியில் கமல்ஹாசனிடம் கேட்டபோது,  “அப்படி நீங்களா நினைச்சுக்கிட்டீங்க. அதுக்கு நான் பொறுப்பில்லை. அவருக்குன்னு ஒரு ரசிகர்கள் இருக்காங்க. நான் என்னதான் கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு நடிச்சா.. அவர் சொடக்குப் போடுறதுக்குள்ள வந்து நின்னு பேரு வாங்கிர்றாரு. அது அவருக்குன்னு இருக்குறது.. அதைத்தான் நான் குறிப்பிட்டேன்..” என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்.

Our Score